ஓரிகாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓரிகாமியில் கொக்கு செய்தலுக்கான காணொளி

ஓரிகாமி (origami)என்பது காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஓர் ஜப்பானியக் கலையாகும். 'ஓரி' என்பது தாளையும் 'காமி' என்பது தாளை மடித்தலையும் குறிக்கும். பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் புகழ்பெற்ற இக்கலையானது 1900-களில் மற்ற நாடுகளுக்கும் பரவியது. தற்போது பாரம்பரிய மரபுப்படி மட்டுமன்றி நவீன வடிவிலும் இக்கலை புகழ்பெற்று வருகிறது. ஒரு சமபரப்புள்ள காகிதத்தை கருவியாகக் கொண்டு மடித்தல் மற்றும் வளைத்தல் மூலமாக மட்டுமே உருவங்கள் உடைய ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதே ஓரிகாமி ஆகும். இக்கலையில் வெட்டுதல், ஒட்டுதல் ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு வெட்டி ஒட்டுவது கிரிகாமி என்னும் கலையாகும்.

ஓரிகாமி கலையில் குறைந்த எண்ணிக்கையிலான தாள் மடிப்புகளே செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் சிற்சில வேறுபாடுகளுடைய மடிப்புகள் மூலமே பலவகையான உருவங்கள் படைக்கப்படுகின்றன. ஓரிகாமிக் கலையில் அறியப்படும் மிகப் புகழ்பெற்ற உருவம் ஜப்பானியக் கொக்கு ஆகும். பொதுவாக ஒரு சதுர வடிவிலான இரண்டு பக்கங்களிலும் மாறுபட்ட வண்ணங்கள் கொண்ட காகிதம் இக்கலைக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமான ஓரிகாமி 1603-1867 வரை (இடோ சகாப்பதம்)பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது. ஓரிகாமி கலையின் சில நுட்பங்கள் தற்போது சிப்பம் கட்டுதல் மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படுகிறது.[1]

படிமங்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஓரிகாமி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

  1. Merali, Zeeya (June 17, 2011), "Origami Engineer Flexes to Create Stronger, More Agile Materials", Science, 332: 1376–1377

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிகாமி&oldid=3344772" இருந்து மீள்விக்கப்பட்டது