ஓராயிரம் பிரகாசமான சூரியன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓராயிரம் பிரகாசமான சூரியன்கள்
A Thousand Splendid Suns.gif
முதற்பதிப்பின் முன்னட்டை
நூலாசிரியர்காலீத் ஹொசேனி
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெளியிடப்பட்ட நாள்
மே 22, 2007
பக்கங்கள்384 பக்கங்கள் (முதற்பதிப்பு, கடின அட்டை)
ISBN978-1-59448-950-1 (முதற்பதிப்பு, கடின அட்டை)
OCLC85783363
813/.6 22
LC வகைPS3608.O832 T56 2007

ஓராயிரம் பிரகாசமான சூரியன்கள் (A Thousand Splendid Suns) 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலப் புதினம். ஆப்கான்-அமெரிக்க எழுத்தாளரான காலீத் ஹொசேனியால் எழுதப்பட்டது. இது காலீத்தின் இரண்டாவது புதினம். அவரின் முதல் புதினம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த காத்தாடி பறக்க விடுபவர் (The Kite Runner). மரியம் சட்ட விரோதமாக பிறந்த ஒரு குழந்தை. அவரது முறைகேடான பிறப்பால் அவரது திருமண வாழ்வில் பெரும் துயரம் மற்றும் துஷ்பிரயோகங்கள் சூழ்ந்து வாழ்ந்து வந்தார். லைலா என்று மரியத்துக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. லைலா புதிய தலைமுறையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவளின் தந்தையான ரஷீத் கட்டாயத்தின் காரணமாக சிறிய வயதிலேயே விருப்பமில்லாத திருமணம் புரிந்தார். ரஷீத் மரியத்தின் கணவர்.

ஹொசேனி இந்தப் புதினத்தில் ஒரு அம்மா-மகள் உறவைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஆனால் காத்தாடி பறக்க விடுபவரில் ஒரு தந்தை-மகன் உறவைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்தப் புதினத்தில் அவரது முதல் புதினத்தில் பயன்படுத்திய சில கருப்பொருள்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் அதிகமாகவும் மற்றும் ஆப்கான் நாட்டில் உள்ள சமூக வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பைப் பற்றியும் விவரித்துள்ளார்.

மே 22, 2007 ஆண்டில், ஒரு ஆயிரம் பிரகாசமான சூரியன்கள் வெளியிடப்பட்டது [1] மற்றும் விமர்சகரிடத்தில் (Kirkus Reviews), [2] வெளியீட்டாளர்களின் வாரயிதழ் (Publishers Weekly), நூலக இதழ் (Library Journal), [3] மற்றும் புத்தகப்பட்டியல் (Booklist) [4] -இருந்து பதிப்புக்கு முந்தைய சாதகமான விமர்சனங்களைப் பெற்றது. புதினம் வெளியிட்டபின் நியூயார்க டைம்ஸ் பத்திரிக்கையில் சிறந்து விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் தொடர்ந்து 15 வாரங்கள் முதலிடம் பிடித்தது. [5] சந்தையில் இப்புதினம் அதன் முதல் வாரத்தில், ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. [6] 2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பிக்சர்ஸ் பட உரிமையை வாங்கியது மற்றும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான நோக்கங்களை உறுதி செய்தது.

உருவாக்கம்[தொகு]

தலைப்பு[தொகு]

இந்த நாவலின் தலைப்பு 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈரானிய கவிஞர் சாயிப் தாபிரிஸின் காபூல் என்ற கவிதையின் ஜோசப் டேவிசின் மொழிபெயர்ப்புக் கவிதையின் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது.

"காபூலின் ஒவ்வொரு தெருவும் கண்ணைக் கவர்கிறது
அதன் சந்தைகள் கடக்கும் எகிப்திக் கூண்டுவண்டிகள் 
அவளது கூரையில் பளபளக்கும் எண்ணமுடியா சந்திரன்கள்
அவளது சுவர்களுக்குப் பின்மறையும் ஓராயிரம் பிரகாசமான சூரியன்கள்"

உத்வேகம்[தொகு]

நாவல் எழுத எது தூண்டுகோளாக இருந்தது? என்று காலீத்திடம் கேட்டபோது, அவர் இப்படி கூறினார்.

"எனது முதல் புதினமான காத்தாடி பறக்க விடுபவர் முழுவதும் தந்தை-மகன் உறவை பற்றி மட்டுமே எழுதினேன். அந்தப் புதினத்தில் வரும் அமீரின் மனைவி சோராயாவைத் தவிர அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். இந்தப் புதினத்தில் ஆப்கான் சமுதாயத்தின் பன்முகத்தன்மையைக் கூறாமல் விட்டுவிட்டேன் ஆனால் ஆப்கான் முழுவதும் ஒரு கதை எழுத தேவையான போதுமான விசயங்கள் இருப்பதாகவே நான் உணர்ந்திருந்தேன். இந்த உணர்வு நான் காபூலுக்கு 2003 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தபோது மேலும் அதிகமானது. அங்கு நான் பார்த்த பர்தா அணிந்த பெண்கள் மற்றும் அவர்களைச் சுற்றி வரும் ஐந்தாறு குழந்தைகள், அந்த பெண்களின் இதயத்தை பிழியும் கதைகள் இப்படி பல சம்பவங்கள் தான் இந்தப் புதினம் அம்மா-மகள் உறவைப் பற்றி எழுத உந்துதலாக இருந்தது."

எழுதுதல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Thousand Splendid Suns". Penguin.com (USA). Penguin Group USA (c. 2008). மூல முகவரியிலிருந்து 21 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-06-03.
  2. "A Thousand Splendid Suns". Kirkus Reviews (March 1, 2007). மூல முகவரியிலிருந்து 2007-10-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-12.
  3. "A Thousand Splendid Suns". Library Journal (review archived at MARINet) (January 2007). பார்த்த நாள் 2007-04-12.
  4. Huntley, Kristine (March 2007). "A Thousand Splendid Suns". Booklist. http://www.booklistonline.com/ProductInfo.aspx?pid=1898249&AspxAutoDetectCookieSupport=1. பார்த்த நாள்: July 3, 2013. 
  5. Emrich, Stephanie (June 12, 2013). "'The Kite Runner and A Thousand Splendid Suns' author Khaled Hosseini flies into Fairhope". Gulf Coast News Today. Archived from the original on ஜூலை 4, 2013. https://archive.is/20130704002508/http://www.gulfcoastnewstoday.com/the_courier/community/article_ffd30792-d37b-11e2-aade-0019bb2963f4.html. பார்த்த நாள்: July 3, 2013. 
  6. Jurgensen, Paige (September 24, 2012). "Hosseini's novel tears the heart". The Linfield Review. Archived from the original on நவம்பர் 29, 2013. https://web.archive.org/web/20131129104152/http://www.linfield.edu/linfield-review/2012/09/hosseinis-novel-tears-the-heart/. பார்த்த நாள்: July 4, 2013.