உள்ளடக்கத்துக்குச் செல்

ஓராங் ஊத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓராங் ஊத்தான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
துணைக்குடும்பம்:
Ponginae

Elliot, 1912
பேரினம்:
Pongo

மாதிரி இனம்
Simia pygmaeus
லின்னேயசு, 1760
இனம்

Pongo pygmaeus
Pongo abelii

ஓராங் ஊத்தான் பரவல்

ஒராங்குட்டான் அல்லது ஓராங் ஊத்தான் (Orang Hutan) என்பது மனிதக் குரங்குகளில் உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும். இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும்.

இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினமாகும். இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை. இவற்றின் உடல்சார்ந்த தோற்றம், நடத்தை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக, இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன.

இந்த இனம் தோன்றிய இடம் இந்தோனேசியா, மலேசியாவாக இருந்த போதிலும், இதன் தற்போதைய வாழிடம் சுமாத்திரா, போர்னியோப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகள் ஆகும். ஆனாலும், ஜாவா, தீபகற்ப மலேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன.

பெயர்க் காரணம்

[தொகு]
6 அடி (1.8 மீட்டர்) உயரமுள்ள மனிதனுடன் ஒப்பிடும்போது ஓராங் ஊத்தானின் தோற்றம்

ஓராங் ஊத்தான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது.[2] இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும் [3]. ஒராங் (Orang) என்றால் மனிதன். ஊத்தான் (hutan) என்றால் காடு எனவும் பொருள் தரும்.

மலேசியாவில், இவற்றை ஓராங் ஊத்தான் என்றுதான் அழைக்கிறார்கள்.[4] அது ஒரு வழக்குச் சொல் ஆகும்.[5] Orang utan எனும் இரு சொற்களும் சேர்க்கப்படுவதால் Orangutan என மாறிவிடுகிறது.[6]

நடவடிக்கைகள்

[தொகு]

ஓராங் ஊத்தான் வகை குரங்குகள் தன் சத்தத்தை உயர்த்துவதற்காக தன் கைகளை உபயோகித்துக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். போர்னியோ காடுகளில் வசிக்கும் இவற்றின் நடவடிக்கை ஒவ்வோரு முறைக்கும் வேறு வேறு விதமாக சத்தத்தை மாற்றுகின்றன.[7]

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [IUCN2010.4 |assessors= Ancrenaz, M., Marshall, A., Goossens, B., van Schaik, C., Sugardjito, J., Gumal, M. & Wich, S.|year= 2008|id= 17975|title= Pongo pygmaeus|downloaded= 28 Jan. 2011] Listed as Endangered (EN A4cd v3.1)
  2. Asia’s only great ape, the orang-utan or ‘man of the forest’ is found only on the islands of Borneo and Sumatra.
  3. பக் 182, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என். ஸ்ரீநிவாஸன், வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை
  4. "Many orang utan have been successfully reintroduced into the surrounding forest reserve". Archived from the original on 2015-02-11. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  5. Orang utan
  6. There are various ways to help the Orang Utan Republik Foundation in its mission to save wild orangutans.
  7. ஓராங் ஊத்தான் குரங்குகள் கைகளைக் கொண்டு குரலை உயர்த்துகின்றன
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓராங்_ஊத்தான்&oldid=4083034" இலிருந்து மீள்விக்கப்பட்டது