ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பனோராக்சைடின் மூலக்கூற்று மாதிரி

ஓராக்சைடு (Monoxide) என்பது ஒர் ஆக்சிசன் அணுவை மட்டும் கொண்டுள்ள எந்தவோர் ஆக்சைடையும் குறிக்கும். இதை மோனாக்சைடு என்றும் குறிப்பிடுவர்.

ஒன்று என்பதற்கான கிரேக்க மொழிச்சொல்லான மோனோ என்ற முன்னொட்டு வேதிப் பொருட்களுக்கான இரசாயனப் பெயரிடலில் பயன்படுத்தப்படுகிறது. [1] சரியான பெயரிடல் முறையில் ஓர் ஆக்சிசன் அணு மட்டும் கூடிய சேர்மங்களில் முன்னொட்டு எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. [2] பொதுவாக ஆக்சிசன் அலோகங்களுடன் பிணைந்திருக்கும்போது மட்டும் ஓர் அல்லது மோனோ என்ற முன்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களுடன் ஒற்றை ஆக்சிசன் அணு பிணைந்திருக்கும் நிகழ்வுகளில் இந்த முன்னொட்டு பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக K2O என்ற ஆக்சைடில் பொட்டாசியம் ஓர் உலோகமாகும். எனவே இங்கு பொட்டாசியம் ஓராக்சைடு என்பது தவிர்க்கப்பட்டு பொட்டாசியம் ஆக்சைடு என்றே இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.

ஓராக்சைடுகளில் கார்பனோராக்சைடு என்பது நடுநிலை சேர்மமாகும். செருமேனியம் ஓராக்சைடு ஓர் அமிலத்தன்மை கொண்ட சேர்மமாகும். வெள்ளீயம் ஆக்சைடும் ஈய ஆக்சைடும் ஈரியல்பு ஆக்சைடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Foundations of College Chemistry, 13th Edition. Wiley. 2010. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0470460610. 
  2. Nomenclature of Inorganic Chemistry, IUPAC Recommendations 2005. பக். 69, 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85404-438-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓராக்சைடு&oldid=3044346" இலிருந்து மீள்விக்கப்பட்டது