ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய்
ஒத்தசொற்கள்Trich[1]
நுன்வரைவி மூலம் ஓரனு ஒட்டுண்ணி கருச்சிதைவு நோய்த் தாக்கம் காட்டப்படுகிறது. படத்தில் வலது மேற்பக்கத்ஹ்டில் ஓரணு ஒட்டுண்ணி காணப்படுகிறது.
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்பிறப்புறுப்பில் அரிப்பு, துர்நாற்றத்துடன் கூடிய யோனி வெளியேற்றம், சிறுநீர்க் கழிக்கும்பொழுது எரிச்சல், பாலுறவில் வலி[1][2]
வழமையான தொடக்கம்5 முதல் 28 நாட்களுக்குப் பிறகு வெளிப்படும்[1]
காரணங்கள்பால்வினை நோய்கள்[1][2]
நோயறிதல்Fநுண்ணோக்கியைப் பயன்படுத்தி யோனி திரவத்தில் ஒட்டுண்ணியைக் கண்டுபிடிப்பது, யோனி அல்லது சிறுநீரைப் பரிசோதித்தல் அல்லது ஒட்டுண்ணியின் டி.என்.ஏவை பரிசோதித்தல்[1]
தடுப்புபாலுறவற்று இருத்தல், ஆணுறைகளைப் பயன்படுத்தல்,யோனியில் டவுச்சிங் எனப்படும் நீர்ப்பொழிச்சல் செய்யாமலிருத்தல்[1]
மருந்துநுண்ணுயிர் எதிர்ப்பிs (மெட்ரோனிடசோல் அல்லது டைனிடசோல்)[1]
நிகழும் வீதம்122 million (2015)[3]

ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய் ; என்பது ஓர் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட தொற்று நோய் ஆகும்..[2] சுமார் 70% பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த நோய்த்தொற்றின் போது அறிகுறிகள் தென்படுவது இல்லை. இந்நோய்த் தொற்று ஏற்படும்போது அவை வெளிப்பட்ட 5 முதல் 28 நாட்களுக்குப் பிறகு தான் இதன் அறிகுறிகள் தொடங்குகின்றன.[1] பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, யோனியில் மோசமான மணம் கொண்ட மெல்லிய திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்பொழுதுஎரிச்சல் ஏற்படுதல், பாலுறவின் பொழுது வலி ஆகியவை இதற்கான அறிகுறிகளில் அடங்கும். ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய் இருப்பதால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. இது கர்ப்ப காலத்தில் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.

ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய் என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று (எஸ்.டி.ஐ) ஆகும், இது பெரும்பாலும் யோனி, வாய்வழி அல்லது குதவழிப் பாலுறவு மூலம் பரவுகிறது.[1] இது பிறப்புறுப்பினைத் தொடுவதன் மூலமும் பரவுகிறது. அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத போதும் நோய்த்தொற்றுடையவர்கள் நோயைப் பரப்பலாம்.[2] நுண்ணோக்கியைப் பயன்படுத்தி யோனி திரவத்தில் ஒட்டுண்ணியைக் கண்டுபிடிப்பது, யோனி அல்லது சிறுநீரைப் பரிசோதித்தல் அல்லது ஒட்டுண்ணியின் டி.என்.ஏவை பரிசோதிப்பதன் மூலம் நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. இந்நோய்த் தொற்று இருப்பின் பிற பால்வினை நோய்கள் ( எஸ்.டி.ஐ.க்கள்) பரவ சாத்தியமிருப்பதால் அதற்கான சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாலுறவு இல்லாமலிருத்தல், ஆணுறைகளை பயன்படுத்துதல், பிறப்புறுப்பை டவுச்சிங்க் எனப்படும் நீர்ப்ப்பொழிச்சல் செய்யாது இருத்தல், மேலும் புதிய நபர் ஒருவருடன் உடலுறவில் ஈடுபடும் முன்னர் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல் ஆகியவை இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோயை மெட்ரோனிடசோல் அல்லது டினிடாசோல் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் குணப்படுத்த முடியும். பாலியல் கூட்டாளிக்கும் இந்த சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.[1] ஆயினும் சிகிச்சையின் மூன்று மாதங்களுக்குள் சுமார் 20% மக்கள் மீண்டும் இவ்வகைத் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.[2]

2015 ஆம் ஆண்டில் சுமார் 122 மில்லியன் நபர்கள் இந்த புதிய ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.[3] அமெரிக்காவில், சுமார் 2 மில்லியன் பெண்கள் இந்த ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோயால் பாதிக்கப்பட்டனர்.[1] இது ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி நிகழ்கிறது. ஓரணு ஒட்டுண்ணி முதன்முதலில் 1836 ஆம் ஆண்டில் ஆல்ஃபிரட் டோனே என்பவரால் அடையாளம் காணப்பட்டது.[4] 1916 ஆம் ஆண்டில் இந்த நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியாக இது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அறிகுறிகள்[தொகு]

ஓரணு ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பது இல்லை, பல ஆண்டுகள் வரை கண்டறியப்படாமல் இருந்துள்ளது.[5] சில நேரங்களில் ஆண்குறியில் வலி, எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படும், உடலுறவு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது இரு பாலினருக்கும்சிறுநீர்க் குழாய் அல்லது புணர்புழையின் அசௌகரியம் அதிகரிக்கக்கூடும். பெண்களுக்கு நமைச்சலுடன் கூடிய மஞ்சள்-பச்சை, நுரையுடன், துர்நாற்றம் வீசும் ("மீன்" வாசனை) யோனி வெளியேற்றமும் இருக்கலாம் . அரிதான சந்தர்ப்பங்களில், குறைந்த வயிற்று வலி ஏற்படலாம். அறிகுறிகள் பொதுவாக வெளிப்பட்ட 5 முதல் 28 நாட்களுக்குள் தோன்றும்.[6] ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய், கிளமிடியா நோய் இரண்டுக்கும் நோய் அறிகுறிகள் ஒத்திருப்பதால் சில நேரங்களில் குழப்பம் ஏற்படக்கூடும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Trichomoniasis". Office on Women's Health. August 31, 2015. Archived from the original on 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 March 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Trichomoniasis - CDC Fact Sheet". CDC. November 17, 2015. Archived from the original on 19 February 2013. பார்க்கப்பட்ட நாள் 21 March 2016.
  3. 3.0 3.1 Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.. 
  4. Protozoa and Human Disease. Garland Science.
  5. "STD Facts - Trichomoniasis". cdc.gov. Archived from the original on 2013-02-19.
  6. Trichomoniasis symptoms பரணிடப்பட்டது 2013-02-19 at the வந்தவழி இயந்திரம். cdc.gov
  7. "Can Trichomoniasis Be Confused With Chlamydia?". mylabbox.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2019.