உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரங்கி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரங்கி
ضلع اورنگی
மாவட்டம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணததில் ஓரங்கி மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணததில் ஓரங்கி மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்கராச்சி கோட்டம்
நிறுவிய ஆண்டு1 சூலை1972
தலைமையிடம்ஓரங்கி நகரம்
கலைத்த நாள்ஆகஸ்டு 2001
மீளமைக்கப்பட்ட ஆண்டு11 சூலை 2011
மாவட்டம்[1]ஒரங்கி நகரம்
மாவட்டம்
03
  • மங்கோபிர் நகரம்
    மொமினாபாத் நகரம்
    ஒரங்கி நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
 • நிர்வாகம்மாவட்டக் குழு
 • நாடாளுமன்றத் தொகுதிகள்NA-244 கராச்சி மேற்கு-I
NA-245 கராச்சி மேற்கு-II
NA-246 கராச்சி மேற்கு-III
 • துணை ஆணையாளர்அகமது அலி சித்திக்
 • CNIC குறியீடு42401
பரப்பளவு
 • மாவட்டம்370 km2 (140 sq mi)
ஏற்றம்
58 m (190 ft)
உயர் புள்ளி
528 m (1,732 ft)
தாழ் புள்ளி
28 m (92 ft)
மக்கள்தொகை
 (2023)[3]
 • மாவட்டம்26,79,380
 • அடர்த்தி7,241.6/km2 (18,756/sq mi)
 • நகர்ப்புறம்
24,30,428
 • நாட்டுப்புறம்
2,48,952
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    67.43%
  • ஆண்:
    69.75%
  • பெண்:
    64.79%
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு எண்
75800
தொலைபேசி குறியீடு எண்021
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK
கராச்சி கோட்டத்தின் 7 மாவட்டங்கள்

ஒரங்கி மாவட்டம் (Orangi District) (பழைய பெயர்: கராச்சி மேற்கு மாவட்டம்), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். 2023ஆம் ஆண்டில் கராச்சி மேற்கு மாவட்டத்தின் பெயரை ஒரங்கி மாவட்டம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஓரங்கி நகரம் ஆகும். ஓரங்கி நகரமானது, மாகாணத் தலைநகரான கராச்சிக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,406 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 464,756 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை ஆகும் 2,679,380 ஆகும்.[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 112 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 67.43% ஆகும்[3][6] . இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 673,559 (25.14%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 2,430,428 (90.71%) மக்கள் வாழ்கின்றனர்.[3]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 97.78% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.87% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.35% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]

மொழி

[தொகு]

இம்மாவட்டத்தில் உருது மொழியை 55.40%, பஞ்சாபி மொழியை 4.87%, சிந்தி மொழியை %, பஷ்தூ மொழியை 24.37%, சராய்கி மொழியை 3.46%, இந்த்கோ மொழியை 2.39%, பிற மொழிகளை 2.87% மக்கள் பேசுகிறனர்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

நகர்புற மாவட்டமான ஒரங்கி மாவட்டம் மங்கோபிர், மொமினாபாத் மற்றும் ஒரங்கி நகரம் என 3 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

அரசியல்

[தொகு]

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு (National Assembly) இம்மாவட்டம் 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:

  1. NA-244 கராச்சி மேற்கு-I
  2. NA-245 கராச்சி மேற்கு-II
  3. NA-246 கராச்சி மேற்கு-III

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ADMINISTRATIVE DISTRICTS". Commissioner, Karachi Division. Archived from the original on 14 January 2019. Retrieved 9 June 2021.
  2. "Under SC judgement: Sindh govt repatriates 32 officials of Karachi DMC to parent depts". The News International (newspaper). 22 February 2021. https://www.thenews.com.pk/print/793931-under-sc-judgement-sindh-govt-repatriates-32-officials-of-karachi-dmc-to-parent-depts. 
  3. 3.0 3.1 3.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரங்கி_மாவட்டம்&oldid=4324149" இலிருந்து மீள்விக்கப்பட்டது