உள்ளடக்கத்துக்குச் செல்

ஓய்வூதியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓய்வூதியர் (Pensioner): வயது மூப்பின் காரணமாகவோ (Retirement on Super Annuation) அல்லது பணி செய்ய உடல்நிலை தகுதியில்லாத காரணமாகவோ (Physical Invalid) அல்லது குறிப்பிட்ட காலம் பணியை நிறைவு செய்தவர், சொந்த காரணத்திற்காகவோ சுய விருப்பத்தின் பேரிலோ (Voluntary Retirement) அல்லது நிர்வாகக் காரணங்களால் பணியிலிருந்து கட்டாய ஓய்வு வழங்கி (Compulsory Retirement) பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை ஓய்வூதியர் என்பர். [1].[2].

ஓய்வூதியர் இறுதியாக வாங்கிய ஊதியம் மற்றும் மொத்தப் பணிக்காலத்தை கணக்கில் கொண்டு, ஓய்வூதியர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்குவர்.[3][4].[5]

ஓய்வூதியர்கள் பெறும் பயன்கள் (Retirement or Pensionary Benefits)

[தொகு]

ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் கீழ்கண்ட நிதிப்பலன்கள் பெறுவர்.[6].

  1. ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை தொகுத்து பெறுதல்(Commutation of Pension)[7]
  2. பணிக் கொடை (Death-cum-retirement Gratuity)
  3. ஓய்வூதியர் விடுப்பூதியம் (Encashment of Earned Leave)[8]
  4. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மருத்துவ வசதிகள்]]
  5. ஓய்வூதியர் இறப்பின் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி[9]
  6. ஓய்வூதியர் இறந்தால், அவரது மனைவி/கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.[10]

வாழ்நாள் சான்றிதழ் (Mustring-மஸ்டரிங்)

[தொகு]

ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் முதல் சூன் மாதத்திற்குள், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்திற்கு நேரில் சென்று ”மஸ்டரிங்” பெற வேண்டும். அவ்வாறு வாழ்நாள் சான்றிதழ் (மஸ்டரிங்) பெறாதவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படும்.[11]

ஓய்வூதியர் இறப்பின் உடனடியாக செய்ய வேண்டியது

[தொகு]

ஓய்வூதியர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் பெற, அவர் இறந்த நாள்/நேரம் மற்றும் ஓய்வூதிய பட்டுவடா ஆணை எண், ஓய்வூதியம் பெறுகின்ற வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாக ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். பின்பு ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதம் பெற்றவுடன் படிவம் எண் 14-இல் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அச்சுப் பிரதியுடன் இறந்த ஓய்வூதியரின் வாரிசுகளில் ஒருவர் உரிய கருவூலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூபாய் 50,000/- பெற தனியாக ஒரு விண்ணப்பத்தை, இறப்புச் சான்றுடன் உரிய கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.merriam-webster.com/dictionary/pensioner.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.
  3. Agrawal, Shubham (2022-04-05). "IFHRMS login - karuvoolam.tn.gov.in 2022 (கருவூலம் இஎஹ்ர்மஸ்)". Talkshubh (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  4. http://www.tn.gov.in/karuvoolam/pension.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. http://www.tn.gov.in/karuvoolam/pension/commupen.htm
  8. http://www.tn.gov.in/karuvoolam/pension/encashel.htm
  9. http://www.tn.gov.in/karuvoolam/pension/fbf.htm
  10. http://www.tn.gov.in/karuvoolam/pension/FAMPENSION.htm
  11. http://www.dinamalar.com/news_detail.asp?id=1040170

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்வூதியர்&oldid=3733557" இலிருந்து மீள்விக்கப்பட்டது