ஓய்மான் நல்லியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓய்மான் நல்லியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் இவனை நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற்றுள்ளார்.[1] பொழுது இறங்கிய மாலை வேளையில் புலவர் இவனது வாயிலுக்குச் சென்று தன் தொடாரிப்பறையை முழக்கினாராம்.

நல்லியாதன் இரவு வேளையில் அவருக்குப் புத்தாடையும், தேறலொடு நல்விருந்தும் நல்கிப் போற்றினானாம். அத்தோடு நரகம் போன்ற புலவரின் வறுமை போய்விட்டதாம்.

நீர் நிறைந்திருக்கும் குளத்திலிருந்து மதகுப்பலகையில் பீறிக்கொண்டு பாயும் நீர் போல அவன் வெளிப்பட்டுப் பாய்ந்து புலவரின் வறுமையைப் போக்கினானாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 376.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்மான்_நல்லியாதன்&oldid=2566073" இருந்து மீள்விக்கப்பட்டது