உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம் பிரகாசு வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓம் பிரகாசு வர்மா (O. P. Verma)(20 மார்ச் 1937 - 8 டிசம்பர் 2015) என்பவர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் பஞ்சாபின் ஆளுநராகவும் (2003-04), அரியானா ஆளுநராகவும் (சூலை 2004-ல்), கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இமாச்சல பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். வர்மா உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் மாவட்டத்தில் பிறந்தார். பஞ்சாபின் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன், இமாச்சலப் பிரதேசத்தின் மக்கள் நீதிமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.[1][2][3]

இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பள்ளியில் சட்டக் கல்வி கற்றுள்ளார்..

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singh, Rahul (3 May 2003). "Governor-designate sees himself as people's man". Times of India. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010.
  2. "States of India since 1947". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010.
  3. "Punjab Governor Om Prakash Verma died in Ghaziabad". jagran. 8 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாசு_வர்மா&oldid=3585488" இலிருந்து மீள்விக்கப்பட்டது