உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம் பிரகாசு மாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் பிரகாசு மாத்தூர்
18th சிக்கிம் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 சூலை 2024
முன்னையவர்லட்சுமன் ஆச்சார்யா
மாநிலங்களவை உறுப்பினர்-இராசத்தான்[1]
பதவியில்
5 சூலை 2016 – 4 சூலை 2022
முன்னையவர்ஆசுக் அலி தாக்
பின்னவர்ரண்தீப் சுர்ஜேவாலா
தொகுதிஇராசத்தான்
பதவியில்
2008–2014
தொகுதிஇராசத்தான்
மாநிலத் தலைவர்-பாஜக
பதவியில்
2008-2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1952 (1952-01-02) (அகவை 72)
பாலி, இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஆளுநர் இல்லம், கேங்டாக், சிக்கிம், India

ஓம் பிரகாசு மாத்தூர் (Om Prakash Mathur; பிறப்பு சனவரி 2,1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய சிக்கிம் மாநில ஆளுநரும் ஆவார். இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆவார். ஆரம்பத்தில், இவர் பைரோன் சிங் செகாவத்தால் வளர்க்கப்பட்டார். ஆனால் பின்னர் இவர் பாஜகவில் செல்வாக்குப் பெற்ற தலைவராக ஆனார். இவர் ஆர். எஸ். எஸ். பிரச்சாரகராகவும் பின்னர் குசராத்து பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

மாநிலங்களவை உறுப்பினர்

[தொகு]

2016 மே 29 அன்று, சூன் 11 அன்று நடைபெற்ற மாநிலங்களவை இரு வருடத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் ஒருவராக இவர் இராசத்தானிலிருந்து போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.[2]

பிறப்பும் கல்வியும்

[தொகு]

ஓம் பிரகாசு மாத்தூர் இராசத்தானின் பாலி மாவட்டத்தின் பாலி வட்டத்தில் உள்ள பால்னா அருகிலுள்ள பெடல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1952-இல் பிறந்த இவர், ஜெய்ப்பூரில் உள்ள இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

ஆளுநராக

[தொகு]

ஓம் பிரகாசு மாத்தூரை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 27 சூலை 2024 அன்று சிக்கிம் ஆளுநராக நியமித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாசு_மாத்தூர்&oldid=4107892" இலிருந்து மீள்விக்கப்பட்டது