ஓம் பிரகாசு பரத்வாச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் பிரகாசு பரத்வாச்சு
புள்ளிவிபரம்
பிறப்புமார்ச்சு 18, 1942(1942-03-18)
இறப்பு21 மே 2021( 2021-05-21) (அகவை 79)

ஓம் பிரகாசு பரத்வாச்சு (Om Prakash Bhardwaj) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராவர். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] – 1985 ஆம் ஆண்டு விளையாட்டு மற்றும் தடகள பயிற்சி துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான துரோணாச்சார்யா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] குத்துச்சண்டைக்கான இந்தியாவின் முதல் துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் என்ற சிற்ப்பு இவருக்கு உண்டு.

ஓம் பிரகாசு 1968 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தேசிய பயிற்சியாளராக இருந்தார். இந்த நேரத்தில், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய விளையாட்டு (1970-1986), குறு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் (பிரிசுபேன், 1982), கிங்சு கோப்பை (பாங்காக், 1982) மற்றும் தெற்காசிய கூட்டமைப்பு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பதக்கங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தனர்.

பாட்டியாலாவின் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் குத்துச்சண்டை பயிற்சி துறையின் நிறுவுதலுக்கு ஓம் பிரகாசு முக்கிய காரணமாக இருந்தார். அங்கு இவர் 1975 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்தியாவில் சுமார் 15,000 குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[3] ஓம்பிரகாசு ராகுல் காந்திக்கும் சில அடிப்படை குத்துச்சண்டை நுட்பங்களையும் கற்றுக் கொடுத்தார்.[4]

2021 ஆம் ஆண்டு மே மாதம் 21 அன்று ஓம் பிரகாசு காலமானார்.[5])

மேற்கோள்கள்[தொகு]

  1. "India's first Dronacharya awardee boxing coach OP Bhardwaj, who stood in legendary Muhammad Ali's corner, dies aged 82". Times Of India. 22 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "List of awardees of the Dronacharya award". Ministry of Youth and Sports Affairs. Archived from the original on 20 November 2012. https://web.archive.org/web/20121120012751/http://yas.nic.in/writereaddata/linkimages/7000365931.htm. பார்த்த நாள்: 14 February 2010. 
  3. G. S. Paul (1 March 2006). "First Dronacharya awardee". Chandigarh Tribune. http://www.tribuneindia.com/2006/20060301/cth3.htm#4. பார்த்த நாள்: 28 October 2017. 
  4. "Rahul Gandhi, the boxer, is extremely fit". இந்தியன் எக்சுபிரசு. 26 May 2009. http://www.indianexpress.com/news/rahul-gandhi-the-boxer-is-extremely-fit/466253/. பார்த்த நாள்: 28 October 2017. 
  5. "Indian boxing's first Dronacharya awardee coach O P Bhardwaj dies". Inside port. 21 May 2021.