ஓம் பிரகாசு சிங் கரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓம் பிரகாசு சிங் கரானா
தனித் தகவல்கள்
பிறந்த பெயர்ஓம் பிரகாசு சிங் கரானா
முழுப் பெயர்ஓம் பிரகாசு சிங் கரானா
விளிப்பெயர்(கள்)ஓபி
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்சனவரி 11, 1987 (1987-01-11) (அகவை 34)
பிறந்த இடம்இலகுவாசு ( குர்கவான் அருகில், ஆரியானா)
வசிப்பிடம்இந்தியா
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை138 kg (304 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுண்டெறிதல்
நிகழ்வு(கள்)தடகளம்

ஓம் பிரகாசு சிங் கரானா (Om Prakash Singh Karhana பிறப்பு: ஜனவரி 11, 1987) என்பவர் இந்தியக் குண்டெறி வீரர் ஆவார். இவர் 6 அடிகள் 7 அங்குலங்கள் (2.01 m) உயரமும் 138 கிலோகிராம்கள் (304 lb) எடையும் உள்லவர். இவர் சல்வான் எறிதல் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார், இங்கு தான் இவரும் குண்டெறிதலில் பயிற்சி பெற்றார். இவரை ஈட்ட நாட்டமில்லாத ஒலிம்பிக் தங்க வேட்பு அறக்கட்டளை ஆதரிக்கிறது. இது இந்திய தடகள வீரர்களை இனங்கண்டு பயிற்சி தருகிறது.[1][2][3][4][5] இவர் முதலில் கூடைப்பந்தாட்ட வீரராக விளங்கியவர். இவரை இந்தியத் தடகளச் செயலாளர் இலலித் பானோத் அணுகவே குண்டெறிதலுக்கு மாறினார்.[5]

இவர் இந்தியத் தேசியப் பதிவில் 20.69 மீ சாதனையை எட்டியவர். இந்தச் சாதனையை அங்கேரியில் சோம்பத்தேலியில் 2012 மேவில் நடந்த விளையாட்டுகளில் இவர் அடைந்தார். இவர் 2012 இல் இலண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதி பெற்று கலந்துகொண்டார்.[6] மேலும் 2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் இறுதிவரை வந்து ஆறாமவராகத் தேர்ந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]