ஓம் சிவ்புரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் சிவ்புரி
பிறப்பு14 சூலை 1936
பட்டியாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு15 அக்டோபர் 1990 (வயது 54)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1964–1990
வாழ்க்கைத்
துணை
சுதா சிவ்புரி
பிள்ளைகள்ரிது சிவ்புரி, வினீத் சிவ்புரி

ஓம் சிவ்புரி (Om Shivpuri) (14 சூலை 1936 - 15 அக்டோபர் 1990) இந்திய நாடக நடிகரும், இயக்குனரும், இந்தித் திரைப்படங்களில் குணசித்திர நடிகராகவும் இருந்தார்.

புது தில்லி தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் அதன் நாடக நிறுவனத்தின் (1964) முதல் தலைவராகவும் அதன் நடிகர்களில் ஒருவராகவும் இருந்தார். பின்னர் இவர் முக்கியமான நாடகக் குழுவான "திஷந்தர்" என்பதை புதுதில்லியில் நிறுவினார் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவில் பிறந்த இவர், ஜலந்தர் வானொலி நிலையத்தில் பணியில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவரது மனைவியான சுதா சிவ்புரி அந்த நேரத்தில் அங்கு பணியாற்றி வந்தார். [1]

பின்னர், இவர்கள் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தனர். மேலும், இப்ராஹிம் அல்காசியின் கீழ் பயிற்சி பெற்றனர். 1963இல் பட்டம் பெற்ற பிறகு, இவர்கள் தேசிய நாடகப் பள்ளியில் புதிதாக உருவாக்கப்பட்ட, நாடக நிறுவனத்தில் நடிகர்களாக சேர்ந்தனர். இவர் அந்நிறுவனத்தின் முதல் தலைவராகவும் 1976 வரை இருந்தார். மனோகர் சிங் இவருக்குப் பின் அப்பதவிக்கு வந்தார். [2]

இவர்கள் இருவரும் 1968இல் திருமணம் செய்துகொண்டு "திஷந்தர்" என்ற தங்களது சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினர். இது தில்லியின் சகாப்தத்தின் முக்கியமான நாடகக் குழுக்களில் ஒன்றாக மாறியது. [3] இவர்கள் த்ங்களது நிறுவனத்தின் மூலம் இந்தி நாடகமான ஆதே ஆதுரே ; காமோஷ்! அதாலத் ஜாரி ஹை , விஜய் டெண்டுல்கரின் சந்ததா என்ற மராத்தி நாடகத்தின் இந்தி பதிப்பான சந்ததா! கோர்ட் சாலு ஆஹே (தனது மனைவி சுதா சிவ்புரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்), இவர்களின் சொந்தத் தயாரிப்பில், கிரீஷ் கர்னாட்டின் வரலாற்று நாடகமான துக்ளக் போன்ற நாடகங்களை இவர் இயக்கினார். துக்ளக் நாடகம் தில்லியின் தல்கோத்தரா தோட்ட அரங்கில் நிகழ்த்தப்பட்டது. [4]

படங்கள்[தொகு]

இவர், 1971ஆம் ஆண்டில் மணி கவுலின் ஆஷாத் கா ஏக் தின் என்ற படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், குல்சாரின் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டில் வெளிவந்த கோசிஷ் படத்திலும் நடித்திருந்தார்.

இவர் 1974 இல் மும்பைக்கு மாறினார். சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், 175க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் எதிர் நாயகனுக்கு துணை நடிகராக பல்வேறு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவரது மனைவி சுதா சிவ்பூரியும் ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்தார், மேலும் கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் 'பா' என்ற பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்தி திரைப்பட நடிகையான ரிது சிவ்புரி இவர்களது மகளாவார். மேலும், வினீத் என்ற மகனும் இருக்கிறார்.

இறப்பு[தொகு]

ஓம் சிவபுரி 1990இல் மாரடைப்பால் இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவரது பல படங்கள் வெளியிடப்பட்டன. [5]

மரபு[தொகு]

ஓம் சிவ்புரியின் நினைவாக ராஜஸ்தான் சங்கீத நாடக அகாதமி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடக விழாவை ஏற்பாடு செய்கிறது. ஓம் சிவ்புரி நினைவு நாடக விழா ஐந்து நாள் திருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது. இது அக்டோபர் 16 அன்று தொடங்கப்படுகிறது (ஓம் சிவ்புரியின் மரண ஆண்டு). [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajasthan Cultural Heritage.
  2. "NSD Repertory". Archived from the original on 20 October 2007. பார்க்கப்பட்ட நாள் 29 October 2007.
  3. "Hindi Theatre". Archived from the original on 1 March 2009. பார்க்கப்பட்ட நாள் 29 October 2007.
  4. "Modern Indian Theatre". Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 29 October 2007.
  5. "Interview Sudha Shivpuri". Archived from the original on 29 December 2007. பார்க்கப்பட்ட நாள் 29 October 2007.
  6. "Rajasthan Sangeet Natak Akademi". Archived from the original on 10 December 2007. பார்க்கப்பட்ட நாள் 29 October 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_சிவ்புரி&oldid=3708257" இலிருந்து மீள்விக்கப்பட்டது