ஓம் காளி ஜெய் காளி
| ஓம் காளி ஜெய் காளி | |
|---|---|
| வகை | அதிரடித் திகைப்பூட்டும் |
| எழுத்து | ராமு செல்லப்பா |
| திரைக்கதை | ராமு செல்லப்பா குமரவேல் |
| இயக்கம் | ராமு செல்லப்பா |
| நடிப்பு |
|
| இசை | பாடல்கள்: கார்த்திக் ராஜா பின்னணி இசை: ஜெய்குமார் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| பருவங்கள் | 1 |
| அத்தியாயங்கள் | 5 |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் | ஜெகன் பாஸ்கரன் |
| ஒளிப்பதிவு | ராஜேஷ் சுக்லா |
| தொகுப்பு | பிரவீன் கே. எல் |
| ஓட்டம் | 38–51 நிமிடங்கள் |
| தயாரிப்பு நிறுவனங்கள் | பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோ |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | டிஸ்னி+ ஹாட்ஸ்டார் |
| ஒளிபரப்பான காலம் | 28 மார்ச் 2025 – தற்போது |
ஓம் காளி ஜெய் காளி (Om Kali Jai Kali) 2025-ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி அதிரடிப் பரபரப்பூட்டும் இணையத் தொடராகும். இதனை ராமு செல்லப்பா எழுதி இயக்கியுள்ளார்.[1] இதில் விமல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் புகழ், கஞ்சா கறுப்பு, டக்ளஸ் குமாரமூர்த்தி, பவன், பவானி ரெட்டி, டி. ஆர். கே. கிரண், இளங்கோ குமரவேல், யோகி ராம், ராஜன் கிருஷ்ணசாமி, திவ்யா துரைசாமி, மகேஸ்வரி சாணக்யன், குயின்சி ஸ்டான்லி, ஷிவின் கணேசன், சீமா பிஸ்வாஸ் மற்றும் ஜி. எம். குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் 28 மார்ச் 2025 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- விமல் — கணேசன்
- புகழ் — மூக்காண்டி
- கஞ்சா கறுப்பு — வக்கீல்
- டக்ளஸ் குமாரமூர்த்தி — பன்னிமாடன்
- ஷிவின் கணேசன் — நாகினி
- பவானி ரெட்டி — பாமா
- பவன் — பரணி
- டி. ஆர். கே. கிரண் — ஏ.ஜே.
- இளங்கோ குமரவேல் — தம்புரான்
- யோகி ராம் — ரகு
- ராஜன் கிருஷ்ணசாமி — உமாசங்கர்
- திவ்யா துரைசாமி — மீனா
- மகேஸ்வரி சாணக்யன் — சுபா
- குயின்சி ஸ்டான்லி — நீலா
- சீமா பிஸ்வாஸ் — காத்தாடி
- ஜி. எம். குமார்
தயாரிப்பு
[தொகு]மேம்பாடு
[தொகு]இந்தத் தொடர் 2025 பிப்ரவரி மாதத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் அறிவிக்கப்பட்டது. எங்கிட்ட மோதாதே திரைப்படத்தின் இயக்குநரான ராமு செல்லப்பா, இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள இத்தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராஜேஷ் சுக்லா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை பிரவீன் கே. எல் செய்துள்ளார்.[2][3]
நடிகர் தேர்வு
[தொகு]விமல், விலங்கு தொடருக்கு பிறகு இரண்டாவது முறையாக இணையத் தொடரில் நடித்துள்ளார். இவருடன் புகழ், கஞ்சா கறுப்பு, டக்ளஸ் குமாரமூர்த்தி, பவன், பவானி ரெட்டி, டி. ஆர். கே. கிரண், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி, மகேஸ்வரி சாணக்யன், குயின்சி ஸ்டான்லி, சிவின் கணேசன், சீமா பிஸ்வாஸ் மற்றும் ஜி. எம். குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.[4][5][6]
வெளியீடு
[தொகு]இத்தொடரின் முன்னோட்டம் 28 பிப்ரவரி 2025 அன்று வெளியிடப்பட்டது.[7] தொடரின் அதிகாரப்பூர்வ முன்னோட்டக் காணொளி 12 மார்ச் 2025 அன்று வெளியிடப்பட்டது.[8][9] இத்தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் 28 மார்ச் 2025 அன்று வெளியிடப்பட்டது.[10][11]
அத்தியாயங்கள்
[தொகு]| No. | Title | Directed by | Written by | Original air date |
|---|---|---|---|---|
| 1 | "சரண்டரிங் டூ காட்" | ராமு செல்லப்பா | ராமு செல்லப்பா | 28 மார்ச் 2025 |
| 2 | "காஸ் அண்ட் வெஞ்சன்ஸ்" | ராமு செல்லப்பா | ராமு செல்லப்பா | 28 மார்ச் 2025 |
| 3 | "ரிவஞ்ச் அண்ஃபோல்ட்ஸ்" | ராமு செல்லப்பா | ராமு செல்லப்பா | 28 மார்ச் 2025 |
| 4 | "ஜஸ்டிஸ் சர்வ்டு" | ராமு செல்லப்பா | ராமு செல்லப்பா | 28 மார்ச் 2025 |
| 5 | "தெ ஃபைனல் வெர்டிக்ட்" | ராமு செல்லப்பா | ராமு செல்லப்பா | 28 மார்ச் 2025 |
குறிப்புகள்
[தொகு]- 1 2 "Vemal and Pavani starrer 'Om Kali Jai Kali' set for OTT premiere on soon". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vemal-and-pavani-starrer-om-kali-jai-kali-set-for-ott-premiere-on-soon/articleshow/118803067.cms.
- ↑ "விமல் நடிப்பில் புதிய வெப்தொடர் ஓம் காளி ஜெய் காளி விரைவில்..." (in Tamil). Maalai Malar. https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimals-new-web-series-om-kali-jai-kali-coming-soon-762638.
- ↑ "Vemal and Pavani starrer 'Om Kali Jai Kali' set for OTT premiere on soon". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vemal-and-pavani-starrer-om-kali-jai-kali-set-for-ott-premiere-on-soon/articleshow/118803067.cms.
- ↑ Goutham S. "Om Kali Jai Kali OTT release: When and where to watch Vemal starrer Tamil web series". Pinkvilla. https://www.pinkvilla.com/entertainment/south/om-kali-jai-kali-ott-release-when-and-where-to-watch-vemal-starrer-tamil-web-series-1377390.
- ↑ "Did you know Bigg Boss Tamil fame Shivin Ganesh acted in Vimal's upcoming web series 'Om Kali Jai Kali'". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/did-you-know-bigg-boss-tamil-fame-shivin-ganesh-acted-in-vimals-upcoming-web-series-om-kali-jai-kali/articleshow/119249245.cms.
- ↑ "Seema Biswas: I thought Bandit Queen would be my last film". Cinema Express. https://www.cinemaexpress.com/tamil/interviews/2025/Mar/18/seema-biswas-i-thought-bandit-queen-would-be-my-last-film.
- ↑ Akshay Kumar. "Om Kali Jai Kali Trailer: Vemal in a fiery avatar in this supernatural political thriller". Cinema Express. https://www.cinemaexpress.com/tamil/news/2025/Mar/12/om-kali-jai-kali-trailer-vemal-in-a-fiery-avatar-in-this-supernatural-political-thriller.
- ↑ "Vemal's Om Kali Jai Kali Web Series Trailer Teases An Intriguing Political Thriller". Filmfare. Retrieved 13 March 2025.
- ↑ Rakesh. "வித்தியாசமான கெட்டப்பில் விமல் மிரட்டும் ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸ் டிரைலர்!" (in Tamil). Times Now. https://tamil.timesnownews.com/entertainment/vimals-om-kali-jai-kali-tamil-web-series-trailer-video-151263199.
- ↑ "Vemal's Om Kali Jai Kali trailer unveiled, Streaming from March 28". News Today. https://newstodaynet.com/2025/03/13/vemals-om-kali-jai-kali-trailer-unveiled-streaming-from-march-28/.
- ↑ "விமல் நடித்த 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு" (in Tamil). Maalai Malar. https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimal-starrer-om-kali-jai-kali-web-series-release-date-announced-764302.
மேற்கோள்கள்
[தொகு]- "விமல் நடித்த 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு" (in ta). மாலை மலர். https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimal-starrer-om-kali-jai-kali-web-series-release-date-announced-764302.
- "Vemal's Om Kali Jai Kali trailer unveiled, Streaming from March 28". News Today. https://newstodaynet.com/2025/03/13/vemals-om-kali-jai-kali-trailer-unveiled-streaming-from-march-28/.
- "Om Kali Jai Kali Trailer: Vemal in a fiery avatar in this supernatural political thriller". சினிமா எக்ஸ்பிரஸ். https://www.cinemaexpress.com/tamil/news/2025/Mar/12/om-kali-jai-kali-trailer-vemal-in-a-fiery-avatar-in-this-supernatural-political-thriller.