ஓம்போக் அர்ஜெசுடெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்போக் அர்ச்செசுடெசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சைலூரிட்டே
பேரினம்:
இனம்:
ஓ. அர்ச்செசுடெசு
இருசொற் பெயரீடு
ஓம்போக் அர்ச்செசுடெசு
சுதசின்கே & மீகாசுகும்புரா, 2016

ஓம்போக் அர்ச்செசுடெசு (Ompok argestes), என்ற மீன் இனமானது இலங்கையில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி. இது சைலூரிடே குடும்பத்தினைச் சார்ந்த பூனை மீனாகும்.

விளக்கம்[தொகு]

ஆண் மீனானது 14.7 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இது நீர்நிலைகளில் அடிப்பகுதியில் காணக்கூடிய மீன் வகையாகும். நான்கு மென்மையான முதுகெலும்பு கதிர்களுடன் 56 முதல் 63 மென்மையான குத கதிர்களையும், 48 முதல் 52 முதுகெலும்புகளையும் கொண்டுள்ளன.[2] உடல் மற்றும் தலை சாம்பல் பழுப்பு நிறத்தில் காணப்படும். இரண்டு இணை பார்பல்கள் உள்ளன. நுனிப்பகுதியில் வாய் காணப்படும். மேல் தாடையை விடக் கீழ் தாடை நீளமாக இருக்கும். கண்கள் சிறியவை, விளிம்பற்றவை. முதுகுபுற, இடுப்பு, வால், துடுப்புகளில் மெலனோபோர் எனப்படும் நிறமிகள் காணப்படும். குத துடுப்பானது சாம்பல் கலந்த பழுப்புநிறத்துடனும், இடுப்பு துடுப்பு தெளிவாகக் காணப்படும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fernado, M.; Kotagama, O.; de Alwis Goonatilake, S. (2020). "Ompok argestes". IUCN Red List of Threatened Species 2019: e.T149851149A174847815. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T149851149A174847815.en. https://www.iucnredlist.org/species/149851149/174847815. பார்த்த நாள்: 12 February 2021. 
  2. "Ompok argestes Sudasinghe & Meegaskumbura, 2016". fishbase. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  3. "A New Species of Silurid Catfish (Teleostei: Siluridae) Endemic to Sri Lanka". Novataxa. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்போக்_அர்ஜெசுடெசு&oldid=3517439" இலிருந்து மீள்விக்கப்பட்டது