ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில் என்பது திருச்சி மாவட்டம் ஓமாந்தூரில் அமைந்துள்ள கோயிலாகும்.[1] இங்கு மூலவராக ஏகாம்பரேசுவரரும், அம்மனாக அன்னகாமாட்சியும் உள்ளனர்.[2] கொல்லிமலை மாசி பெரியசாமிக்கு இருக்கும் கோயில்களில் இந்தக் கோயிலே மிகப் பெரியதாகும். எனவே இக்கோயில் ஓமாந்தூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த தெய்வங்களோடு தனிச்சந்நிதிகளில் எண்ணற்ற நாட்டர் தெய்வங்களும் உள்ளனர்.

இக்கோயிலில் எந்தக் கடவுளுக்கும் உருவ வழிபாடு இல்லை. அனைவரும் ஒளி வடிவிலேயே காட்சிதருகின்றனர். பைரவர், லாட சன்னியாசி, மாசி கருப்பசாமி, அப்பாச்சியாயி, குப்பாச்சியாயி போன்ற அனைவருமே ஒளி வடிவிலேயே காட்சிதருகின்றனர். இக்கோயிலில் 64 பதிவுகள் உள்ளன.

தல சிறப்பு[தொகு]

  • இங்குள்ள அனைத்து தெய்வங்களுக்கும் உருவ வழிபாடு இல்லை. அனைத்தையுமே ஒளிவடிவிலேயே வழிபடுகின்றனர்.
  • கொடிக்கம்பத்திற்கு பதிலாக மிகப்பெரிய வேல் வைக்கப்பட்டுள்ளது.

சந்நிதிகள்[தொகு]

ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

  • தமிழ் வருடப்பிறப்பு
  • ஆங்கில வருடப்பிறப்பு
  • ஆடி 18, ஆடி 28
  • மகாசிவராத்திரி

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் கோயில்கள்
  2. http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2015/02/18023138/Special-worship-at-temples-in-honor-of-Lord-Shiva.vpf

இவற்றையும் காண்க[தொகு]