ஓமர் எம். யாகி
| ஓமர் யாகி Omar Yaghi | |
|---|---|
2025 இல் யாகி | |
| பிறப்பு | ஓமர் மௌனசு யாகி பெப்ரவரி 9, 1965 அம்மான், ஜோர்தான் |
| குடியுரிமை |
|
| துறை | வலைய வேதியியல் |
| பணியிடங்கள் |
|
| கல்வி | அட்சன் வெலி சமூகக் கல்லூரி அல்பானி பல்கலைக்கழகம் (இ.அ) இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்) (முதுமாணி, முனைவர்) |
| ஆய்வேடு | நீர்மம் அல்லாத ஊடகங்களில் பாலியாக்சோவனடேட்டுகளின் தொகுப்பு, அமைப்பு, வினைத்திறன் (1990) |
| ஆய்வு நெறியாளர் | வால்டர் கிளெம்பரர் |
| அறியப்படுவது | உலோகக் கரிமக் கட்டமைப்புகள் |
| விருதுகள் | நியூகாம்ப் க்ளீவ்லாந்துப் பரிசு (2007) ஐன்சுடைன் உலக அறிவியல் விருது (2017) வேதியியல் வுல்ஃப் பரிசுகள் (2018) எனி விருது (2018) தாங் பரிசு (2024) பல்சான் பரிசு (2024) வேதியியலுக்கான நோபல் பரிசு (2025) |
| இணையதளம் Official website | |
ஓமர் மௌனசு யாகி (Omar Mwannes Yaghi, அரபி: عمر مونّس ياغي; பிறப்பு: பெப்ரவரி 9, 1965) என்பவர் பாலத்தீன–அமெரிக்க, யோர்தானிய வேதியியலாளர் ஆவார். இவர் வலைப்பின்னல் வேதியியல், உலோக-கரிமக் கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கான ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, இவருக்கும், ரிச்சர்ட் ராப்சன், சுசுமு கித்தகாவா ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.[1] யாகி பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பேராசிரியராகவும், யேம்சு, நீல்ட்சே டிரெட்டர் நல்கையின் தலைவராகவும் உள்ளார். இவர் லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகத்தில் இணை அறிவியலாளராகவும், பெர்க்லி உலக அறிவியல் கழகத்தின் நிறுவன இயக்குநராகவும், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தினதும்,[2] செருமானிய தேசிய அறிவியல் கழகத்தின் லியோபோல்டினாவின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4] 2025 சனவரியில், கலாச்சார, அறிவியல் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பான உலக கலாச்சாரப் பேரவையின் ஏழாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]யாகி 1965 ஆம் ஆண்டு யோர்தானின் அம்மான் நகரில் ஒரு பாலத்தீன அகதிக் குடும்பத்தில் பிறந்தார்.[6][7] 1948 ஆம் ஆண்டு பாலத்தீனர்களின் வெளியேற்றத்தின் போது காசாக்கரையில் இருந்து தப்பி ஓடியவர்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும்.[8] அம்மானில் பல குழந்தைகளுடன் கூடிய நெரிசலான வீட்டில் வளர்ந்தார், அனைவரும் குடும்பத்தின் கால்நடைகளை வைத்திருந்த ஒரே அறையில் வசித்து வந்தனர்.[9] குடும்பத்திற்கு சுத்தமான குடி நீர், மின்சாரம் குறைவாகவே இருந்தது.[10]
15-ஆவது அகவையில், தனது தந்தையின் ஊக்கத்தால், யாகி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்.[11] அங்கு அவர் அட்சன் வேலி சமூகக் கல்லூரியில் கல்வி பயிலத் தொடங்கினார், பின்னர் அல்பானியில் உள்ள நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இலினொய் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து, 1990-இல் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[12] பின்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (1990–1992) தேசிய அறிவியல் அறக்கட்டளை முதுகலை ஆய்வாளராகப் பணியாற்றினார்.
2021 ஆம் ஆண்டில், யாகிக்கு அரச ஆணையால் சவூதி அரேபியக் குடியுரிமை வழங்கப்பட்டது.[13]
கல்விப் பணி
[தொகு]யாகி அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (1992–1998) உதவிப் பேராசிரியராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (1999–2006) வேதியியல் பேராசிரியராகவும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அறிவியலில் பேராசிரியராகவும் (2007–2012) பணியாற்றினார்.[14]
2012-ஆம் ஆண்டில், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 2012 முதல் 2013 வரை, லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தில் மூலக்கூறு வார்ப்புக்கூடத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். பெர்க்லி உலக அறிவியல் கழகத்தின் நிறுவன இயக்குநராகவும், காவ்லி ஆற்றல் நானோ அறிவியக் கழகத்தின் இயக்குநராகவும் உள்ளார். மேலும், பி.எ.எசு.எப், பகார் எண்ணிமப் பொருட்கள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஆய்வுக் கூட்டணியை இணைந்து இயக்குகிறார்.[15]
மே 2025 இல், கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகக் குழு யாகியை பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தியது, இது மிக உயர்ந்த பன்னாட்டு சிறப்பு வாய்ந்த அறிஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட அமைப்பின் மிக உயர்ந்த கௌரவமாகும்.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nobel Prize in Chemistry 2025". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-08.
- ↑ " National Academy of Sciences Elects Members and Foreign Associates ", National Academy of Sciences, Retrieved on 30 April 2019.
- ↑ " List of Members Expert Search Professor Dr. Omar M. Yaghi ", German National Academy of Sciences Leopoldina "], Retrieved on 9 June 2023.
- ↑ " Omar Yaghi appointed as University Professor ", UC Berkeley College of Chemistry "], Retrieved on 26 June 2025.
- ↑ " Our President ", World Cultural Council, Retrieved on 25 July 2025.
- ↑ Ahlander, Johan; Pollard, Niklas; Mannes, Marie (October 8, 2025). "Trio win Nobel chemistry prize for work on 'Hermione's handbag' materials". ராய்ட்டர்ஸ்.
- ↑ " Omar Yaghi Winner of Wolf Prize in Chemistry – 2018 " பரணிடப்பட்டது 2022-05-17 at the வந்தவழி இயந்திரம், Wolf Foundation, Retrieved on 4 March 2018.
- ↑ "A long ‘journey’ for Nobel chemistry winner born to Palestinian refugees" (in en-US). The Washington Post. 2025-10-08. https://www.washingtonpost.com/world/2025/10/08/nobel-prize-palestinian-omar-yaghi-chemistry/. "Yaghi grew up in Amman, Jordan, where his parents moved after fleeing Gaza in 1948, when hundreds of thousands of Palestinians were forced from their homes amid sectarian fighting in what would soon become Israel."
- ↑ " A Pioneer in Reticular Chemistry: Shaping a Sustainable Future - Omar M. Yaghi ", [ Tang Prize documentary ], Retrieved on 19 May 2025.
- ↑ " Omar Yaghi: Harvesting water from desert air ", [ Molecular Frontiers Symposium "Planet Earth: A Scientific Journey", at Stockholm University, May 9–10, 2019 ], Retrieved on 30 December 2019.
- ↑ " The Alchemist " பரணிடப்பட்டது 2018-08-28 at the வந்தவழி இயந்திரம், போர்ப்ஸ், Retrieved on 1 February 2018.
- ↑ Yaghi, Omar M. (1990). Synthesis, structure, and reactivity of polyoxovanadates in nonaqueous media (PhD thesis). இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்). கணினி நூலகம் 774917622. ProQuest 303854222.
- ↑ "Internationally renowned chemist Omar Yaghi 'honored to accept Saudi citizenship'". arabnews.com. 14 November 2021.
- ↑ "Wolf Prize in Chemistry: M. Fujita and O. M. Yaghi / Albrecht Kossel Prize: A. Beck-Sickinger". Angewandte Chemie International Edition 57 (13): 3287. 2018. doi:10.1002/anie.201802237. பப்மெட்:29504702. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/anie.201802237.
- ↑ " New institute brings together chemistry and machine learning to tackle climate change ", Retrieved on 21 September 2022.
- ↑ " Omar Yaghi appointed as University Professor ", UC Berkeley College of Chemistry, Retrieved on 25 July 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஓமர் எம். யாகி on Nobelprize.org