ஓமந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓமந்தூர், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், ஓமந்தூர் ஊராட்சியில்[1] அமைந்த சிற்றூர் ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 604102 ஆகும். 1947-இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார். ஒமந்தூர் கிராமம் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஓமந்தூர் கிராமத்தின் மக்கள்தொகை 2,264 ஆகும்.

அமைவிடம்[தொகு]

திண்டிவனம்-புதுச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த ஓமந்தூர் கிராமம், திண்டிவனத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும், மரக்காணத்திலிருந்து 33 கிமீ தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 57 கிமீ தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்[தொகு]

ஓமந்தூர் கிராமத்திற்கு அருகமைந்த ஊர்கள் ஓலக்கூர், வானூர், மயிலம் மற்றும் கண்டமங்கலம் ஆகும்.

கல்வி[தொகு]

  1. ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, ஓமந்தூர்
  2. ஒ பி இராமசாமி ரெட்டியார் அரசு மேனிலைப் பள்ளி, ஓமந்தூர்
  3. விகேஎம் சிபிஎஸ்சி உயர்நிலைப் பள்ளி

கோயில்கள்[தொகு]

  1. பீமேஷ்வரர் கோயில்
  2. வைகுந்த நாராயணப் பெருமாள் கோயில்
  3. தேவி கருமாரி அம்மன் கோயில்
  4. சுந்தர விநாயகர் கோயில்
  5. கெங்கை அம்மன் கோயில்
  6. ஓசியம்மன் கோயில்
  7. அங்காளம்மன் கோயில்

முத்து மாரியம்மன் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தூர்&oldid=3291911" இலிருந்து மீள்விக்கப்பட்டது