ஓபகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Unikonta
ஓபகா
Oophaga pumilio Zoo.jpg
ஓபகா புமிலியோ
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: தவளை
குடும்பம்: நச்சு அம்புத் தவளை
துணைக்குடும்பம்: டெண்ட்ரோபேட்டினே
பேரினம்: ஓபேகா
பாஎர், 1994
மாதிரி இனம்
டெண்டிரோபேட்டிசு புமிலியோ
சுமிட், 1857
உயிரியற் பல்வகைமை
9 சிற்றினங்கள் (பார்க்க உரை)

ஓபகா (Oophaga) என்பது ஒன்பது சிற்றினங்களை உள்ளடக்கிய நச்சு அம்புத் தவளைகளின் பேரினமாகும். இவற்றில் பல முன்பு டென்ட்ரோபேட்ஸ் பேரினத்தில் வைக்கப்பட்டன.[1] இந்த தவளைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் நிக்கராகுவாவிலிருந்து கொலம்பியா எல் சோகோ வழியாக வடக்கு ஈக்வடார் வரை (1,200 மீ (3,900 ft) க்கும் குறைவான உயரத்தில்) பரவிக்காணப்படுகின்றன. [2] இவற்றில் சில மரங்களிலும், சில இனங்கள் நிலப்பரப்பிலும் வாழ்கின்றன.[3] இந்த தவளைகளில் காணப்படும் பொதுவான பண்பு என்னவெனில் இதனுடைய இளம் உயிரிகள், தலைப்பிரட்டைகள் முட்டைகளை உணவாக உண்ணக் கூடியவையாக உள்ளன.

பெயர்க்காரணம்[தொகு]

இத்தவளைப் பேரினத்தின் பெயரில் உள்ள ஓபாகா என்பது, கிரேக்க மொழியில் "முட்டை உண்பவர்" (Oon, phagos),[4] [5] என்பது தலைப்பிரட்டையின் செயலைக் குறிப்பதாக உள்ளது.[6] [7]

இனப்பெருக்கம்[தொகு]

டென்ட்ரோபாடி தவளைகள் அனைத்தும் பெற்றோர் பேணல் வழக்கத்தினைக் கொண்டுள்ளன. இப்பழக்கமானது ஓபகாவில் வழக்கத்திற்கு மாறாக முன்னேறிக் காணப்படுகிறது. தலைப்பிரட்டைகளுக்குப் பெண் தவளைகள் உணவாகக் கருவுறா முட்டைகளை பிரத்தியேகமாக வழங்குகின்றன.[1] முட்டைகள் வழியாக, தாய் தற்காப்பு நச்சுகளையும் தலைப்பிரட்டைகளுக்கு வழங்குகின்றன. ஓபகா புமிலியோ தலைப்பிரட்டைகள் ஆல்கலாய்டுகள் இல்லாத முட்டைகளைச் சோதனை அடிப்படையில் உண்ணப் பழகிவிடுகின்றன.[8]

சிற்றினங்கள்[தொகு]

ஓபாக பேரினத்தின் கீழ் ஒன்பது சிற்றினங்கள் உள்ளன[2]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
ஓபகா ஆர்போரியா (மியர்ஸ், டேலி மற்றும் மார்டினெஸ், 1984) போல்கடோட் விஷ தவளை பனாமா
Korreldragende-gifkikker-3.jpg ஓபகா கிரானுலிஃபெரா (டெய்லர், 1958) சிறுமணி விஷ தவளை கோஸ்டாரிகா மற்றும் பனாமா
Oophaga histrionica.jpg ஓபகா ஹிஸ்ட்ரியோனிகா (பெர்த்தோல்ட், 1845) ஹார்லெக்வின் விஷ தவளை மேற்கு கொலம்பியாவின் எல் சோகே பகுதி
Oophaga lehmanni.jpg ஓபகா லெஹ்மானி (மியர்ஸ் அண்ட் டேலி, 1976) லெஹ்மானின் விஷ தவளை மேற்கு கொலம்பியா
ஓபகா மறைநூல் (மியர்ஸ் மற்றும் டேலி, 1976) லா ப்ரியா விஷ தவளை கொலம்பியாவின் காகா துறையில் கார்டில்லெரா ஆக்சிடெண்டல்
Strawberry dart frog.jpg ஓபகா புமிலியோ (ஷ்மிட், 1857) ஸ்ட்ராபெரி விஷம்-டார்ட் தவளை கிழக்கு மத்திய நிகரகுவா கோஸ்டாரிகா மற்றும் வடமேற்கு பனாமா வழியாக
Oophaga speciosa 3.jpg ஓபகா ஸ்பெசியோசா (ஷ்மிட், 1857) அற்புதமான விஷத் தவளை கோர்டில்லெரா டி தலமங்கா, மேற்கு பனாமா
Dendrobates sylvaticus PLoS.jpg ஓபகா சில்வாடிகா (ஃபன்க ous சர், 1956) டையப்ளிட்டோ விஷ தவளை தென்மேற்கு கொலம்பியா மற்றும் வடமேற்கு ஈக்வடார்.
Oophaga vicentei (16985201179).jpg ஓபகா விசென்டி (ஜங்ஃபர், வெய்கோல்ட், மற்றும் ஜுராஸ்கே, 1996) விசென்டேயின் விஷ தவளை மத்திய பனாமாவின் வெராகுவாஸ் மற்றும் கோக்லே மாகாணங்கள்

செயற்வாழ்விட வளர்ப்பு[தொகு]

ஓபகா செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும், அவற்றினை செயற்கை வாழ்விடத்தில் இனப்பெருக்கம் செய்யவைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. ஆனால் ஓபகா புமிலியோ சிற்றினம் எளிதாக இனப்பெருக்கம் செய்வது மிகவும் பிரபலமாக உள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Grant, T., Frost, D. R., Caldwell, J. P., Gagliardo, R., Haddad, C. F. B., Kok, P. J. R., Means, D. B., Noonan, B. P., Schargel, W. E., and Wheeler, W. C. (2006). "Phylogenetic systematics of dart-poison frogs and their relatives (Amphibia: Athesphatanura: Dendrobatidae)". Bulletin of the American Museum of Natural History (American Museum of Natural History) 299: 1–262. doi:10.1206/0003-0090(2006)299[1:PSODFA]2.0.CO;2. http://digitallibrary.amnh.org/dspace/bitstream/2246/5803/1/B299.pdf. பார்த்த நாள்: 2020-09-19.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "GrantEtal2006" defined multiple times with different content
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Oophaga Bauer, 1994". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 31 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Oophaga — the obligate egg feeders". dendroWorks. 2011. 11 August 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.etymonline.com/index.php?term=-phagous
  5. http://www.etymonline.com/index.php?term=egg
  6. Heselhaus, R. 1992. Poison-arrow frogs: their natural history and care in captivity. Blandford, London.
  7. Zimmermann, E. and Zimmermann, H. 1994. Reproductive strategies, breeding, and conservation of tropical frogs: dart-poison frogs and Malagasy poison frogs. In: J.B. Murphy, K. Adler and J.T. Collins (eds), Captive management and conservation of amphibians and reptiles, pp. 255-266. Society for the Study of Amphibians and Reptiles, Ithaca (New York). Contributions to Herpetology, Volume 11.
  8. Stynoski, J. L.; Torres-Mendoza, Y.; Sasa-Marin, M.; Saporito, R. A. (2014). "Evidence of maternal provisioning of alkaloid-based chemical defenses in the strawberry poison frog Oophaga pumilio". Ecology 95 (3): 587–593. doi:10.1890/13-0927.1. பப்மெட்:24804437. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபகா&oldid=3355241" இருந்து மீள்விக்கப்பட்டது