உள்ளடக்கத்துக்குச் செல்

ஓத நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
An illustration of a tidal strait passing between two landmasses
இரண்டு நிலப்பரப்புகளுக்கு இடையில் செல்லும் ஓர் ஓத நீரிணை

ஓத நீரிணை (Tidal strait) என்பது இரண்டு கடல் பகுதிகளை இணைக்கும் இயற்கையாகத் தோன்றிய குறுகிய கால்வாயாகும். நீரிணையின் வழியாக ஓதநீரோட்டம் பாயும். ஓத நீரோட்டங்கள் பொதுவாக ஒரு திசையில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் இரு திசையிலும் மாறி மாறியும் இருக்கும். ஓத நீரிணைகள், குறுகிய கடல்வழிகளாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக இவை ஆறுகள் அல்ல. இவை பெரும்பாலும் புவி மேலோட்டு இயக்கத் தோற்றம் கொண்டவையாகும். இவற்றில், இரு முனைகளிலும் உள்ள நீர் படுகைகளுக்கு இடையிலான உயர வேறுபாடுகள் காரணமாக நீரோட்டங்கள் உருவாகின்றன.[1] ஓத நீரிணைகள் கடல்கள் மற்றும் பெருங்கடல்களையும், கழிமுக மண்டலங்களையும் இணைக்க முடியும்.[2] சுற்றுச்சூழல் மற்றும் கடல் உயிரியல் பார்வையில் ஓத நீரிணை மிக முக்கியமான பகுதியாகும். அலைகளின் ஆற்றல் காரணமாக இதை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும்.

சில நேரங்களில் அலைகள் ஓத நீரிணைப்புப் பகுதிகளில் வண்டல்கள் சேரவும் அனுமதிக்கின்றன.[3][4]

ஆர்தர் கில் ஓத நிரிணை, பிரால்சு தீவு தெரிகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Longhitano, Sergio G.; Mellere, Donatella; Steel, Ronald J.; Ainsworth, R. Bruce (April 9, 2012). "Tidal depositional systems in the rock record: A review and new insights" (PDF). basin.earth.ncu.edu.tw. Retrieved 27 May 2019.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. South Bronx-Oak Point Link: Environmental Impact Statement (in ஆங்கிலம்). 1982. p. 2.
  3. Longhitano, Sergio; Steel, Ronald J. (June 2015). "Deltas sourcing tidal straits: observations from some field case studies". 31st International Association of Sedimentologists - Meeting of Sedimentology. https://www.researchgate.net/publication/282280995. பார்த்த நாள்: 27 May 2019. 
  4. Rossia, V.M; Longhitano, S.G.; Mellere, D; Dalrymple, R. W; Steela, R.J.; Chiarellae, D.; Olariua, C. (November 2017). "Interplay of tidal and fluvial processes in an early Pleistocene, delta-fed, strait margin (Calabria, Southern Italy)". Marine and Petroleum Geology 87: 14–30. doi:10.1016/j.marpetgeo.2017.02.021. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0264817217300673. பார்த்த நாள்: 27 May 2019. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓத_நீரிணை&oldid=4359163" இலிருந்து மீள்விக்கப்பட்டது