ஓதோம் காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓதோம் காட்டி (Odom's indicator) என்பது பிராந்திய மயக்க மருந்து செலுத்தும்போது தண்டுவட மேலுறை இடைவெளியைக் கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். [1] மருந்தை உட்செலுத்தலுக்கு எதிர்ப்பு குறைந்த பகுதியை கண்டறிவதன் மூலம் மயக்க மருந்தை உட்செலுத்தலாம் என்ற தாக்லியோட்டியின் கொள்கை அடிப்படையில் இந்த கருவி வேலை செய்கிறது. [2] இம்முறையில் மயக்க மருந்து கொடுப்பது மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாகும். முதுகெலும்பு மயக்க மருந்தின் அபாயங்கள் அல்லது தீமைகள் இல்லாமல் சிகிச்சையை தொடர வழிவகுக்கும் எனக் கருதப்பட்ட்து. தண்டுவட மேலுறை இடைவெளியில் உள்ள அழுத்தம் எதிர்மறையானது என்ற அனுமானத்தில் முதலில் ஓதோம் காட்டி வடிவமைக்கப்பட்டது. இக்கருவி பிரபலமாகவில்லை. உப்பிற்கு எதிர்ப்பு இழப்பு அல்லது காற்றுக்கு எதிர்ப்பு இழப்பு நுட்பங்கள் போன்ற மாற்று முறைகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதோம்_காட்டி&oldid=3521415" இலிருந்து மீள்விக்கப்பட்டது