ஓதிக்குப்பம் பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓதிக்குப்பம் பாறை ஓவியங்கள் என்பன, கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள கதிரப்பன் மலை என அழைக்கப்படும் மலைப் பகுதியில் காணப்படும் பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும். ஓதிக்குப்பம் பாசவனக்கோயில் - பர்கூர் சாலையில் அமைந்துள்ளது.[1][2]

வெள்ளை நிறத்தில் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல மனித உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் நான்கு மனித உருவங்கள் ஏறத்தாழ ஒரே வரிசையில் காணப்படுகின்றன. இது ஒரு சடங்கு நடனத்தைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.[3] ஏனைய மனித உருவங்கள் தனித்தனியாக வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இங்கு சிந்துவெளி எழுத்துக்கணைப் போன்ற எழுத்துக்களில் ஏதோ எழுதப்பட்டிருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 112.
  2. துரைசாமி, ப., மதிவாணன், இரா. , பக். 84.
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 113.
  4. துரைசாமி, ப., மதிவாணன், இரா., பக். 173.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]