உள்ளடக்கத்துக்குச் செல்

ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓட்ட விகிதம் (run rate) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாடும் அணி ஒரு நிறைவுக்கு எடுக்கின்ற ஓட்டங்களின் சராசரி அளவாகும்.[1] பொதுவாக 5 நாட்கள் நடைபெறும் தேர்வுப் போட்டிகளில் மட்டையாளர்கள் கவனத்துடன் பொறுமையாக ஆடுவதால் ஓட்ட விகிதம் குறைவாகக் காணப்படும். ஆனால் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் குறிப்பிட்ட நிறைவுகளுக்குள் ஓட்டங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதிக ஓட்ட விகிதம் தேவைப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintosh, Iain (2012). Everything You Ever Wanted to Know About Cricket But Were Too Afraid to Ask. இலண்டன்: A & C Black. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408174340. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.