ஓட்டோ விச்டர்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓட்டோ விச்டர்லே
Prof. Ing. RTDr. Otto Wichterle.jpg
பேராசிரியர் ஓட்டோ விச்டர்லே
பிறப்புஅக்டோபர் 27, 1913(1913-10-27)
புரொசெட்ஜாவ், மொராவியா, ஆத்திரியா-அங்கேரி
இறப்பு18 ஆகத்து 1998(1998-08-18) (அகவை 84)
இசுட்ராசிஸ்கோ, மொராவியா, செக் குடியரசு
தேசியம்செக்
கல்வி கற்ற இடங்கள்பிராகாவில் உள்ள செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
கையொப்பம்

ஓட்டோ விச்டர்லே (Otto Wichterle ;27 அக்டோபர் 1913 – 18 ஆகஸ்ட் 1998) ஓர் செக் வேதியியலாளர் ஆவார். நவீன இவர் மென்மையான தொடு வில்லை ( காண்டாக்ட் லென்சு) கண்டுபிடித்தற்காக மிகவும் புகழெய்தியவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவரது தந்தை கரேல் ஒரு வெற்றிகரமான பண்ணை இயந்திர தொழிற்சாலைக்கும் சிறிய மகிழுந்து ஆலைக்கும் இணை உரிமையாளராக இருந்தார். ஆனால் ஓட்டோ தனது வாழ்க்கைக்காக அறிவியலைத் தேர்ந்தெடுத்தார். புரொசெட்ஜாவில் உயர்நிலைப் பள்ளி (இன்றைய ஓல்கர் இலக்கணப் பள்ளி) முடித்த பிறகு, விச்டர்லே செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் (இரசாயன) மற்றும் தொழில்நுட்ப பீடத்தில் (தற்போது வேதியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தன்னாட்சிப் பல்கலைக்கழகம், பிராகு) படிக்கத் தொடங்கினார். ஆனால் இவர் மருத்துவத்திலும் ஆர்வமாக இருந்தார். இவர் 1936இல் பட்டம் பெற்றார். 1939ஆம் ஆண்டில் வேதியியலில் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஆனால் போகேமியா மற்றும் மொராவியாவின் பாதுகாப்பு ஆட்சியானது பல்கலைக்கழகத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் தடுத்தது. இருப்பினும், விச்டெர்லே சிலினில் உள்ள பாட்டாவின் படைப்புகளில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து தனது அறிவியல் பணிகளைத் தொடர முடிந்தது. அங்கு இவர் பாலிமைடு மற்றும் கேப்ரோலாக்டம் போன்ற நெகிழிகளின் தொழில்நுட்ப தயாரிப்புக்கு தலைமை தாங்கினார். 1941ஆம் ஆண்டில், விச்டெர்லேவின் குழு பாலிமைடு நூலைக் கொண்டு பாலிமைடு முறையைக் கண்டுபிடித்தது. இதன் மூலம் முதல் செக்கோசிலோவாக்கியா செயற்கை இழையை சிலோன் என்ற பெயரில் உருவாக்கியது (கண்டுபிடிப்பு 1938இல் அசல் அமெரிக்க நைலான் நடைமுறையிலிருந்து தொடர்பில்லாது வந்தது). 1942இல் கெஸ்டபோவால் விச்டர்லே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

தொடு வில்லைகளை (காண்டாக்ட் லென்ஸ்) மையவிலக்கு வார்ப்பிற்கான மெர்கூர் அடிப்படையிலான கருவி

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, விச்டர்லே பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி கரிம வேதியியலில் நிபுணத்துவம் பெற்றார். மேலும் பொது மற்றும் கனிம வேதியியலைக் கற்பிப்பதில் தீவிரமாக இருந்தார். இவர் ஒரு கனிம வேதியியல் பாடப்புத்தகத்தை எழுதினார். அதன் கருத்து அதன் காலத்திற்கு முன்னதாக இருந்தது. மேலும் இடாய்ச்சுலாந்திய மற்றும் செக் கரிம வேதியியல் பாடப்புத்தகத்தையும் எழுதினார். 1949ஆம் ஆண்டில், இவர் தனது இரண்டாவது முனைவர் பட்டத்தை நெகிழி தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்தினார். மேலும், நெகிழி தொழில்நுட்பத்தின் புதிய துறையை நிறுவுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். 1952இல் இவர் பிராகு நகரில் புதிதாக நிறுவப்பட்ட வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரானார்.

தொடக்கக்கால தொடுவில்லைகள்[தொகு]

1961ஆம் ஆண்டின் பிற்பகுதியில், விச்டர்லே முதல் நான்கு நீர்மக்கட்டிக் கூழ் தொடு வில்லைகளை வீட்டில் தயாரிக்கப்பட்ட கருவியில் குழந்தைகள் விளையாடும் கட்டிடக் கருவியையும் ( மெர்குர் ), தனது மகன்களில் ஒருவருக்கு சொந்தமான மிதிவண்டி மின்னாக்கியையும், ஒரு சிறிய மின்மாற்றி ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கினார். அவற்றை தனிமூலக் கூறு மூலம் புகுத்த தேவையான அனைத்து அச்சுகளையும் கண்ணாடி குழாய்களையும் செய்தார். ஒரு கிறித்துமசு நாளின் மதியத்தில், தனது மனைவி இலிண்டாவின் உதவியுடன், அவரது சமையலறை மேசையில் இயந்திரத்தைப் பயன்படுத்தி, இறுதியாக வெற்றி பெற்றார். தனது சொந்த கண்களில் தொடுவில்லைகளை பொருத்த முயன்றார். அவை தவறான பார்வை சக்தியாக இருந்தாலும் அவை வசதியாக இருந்தன. எனவே, மையவிலக்கு வார்ப்பு முறையைப் பயன்படுத்தி தொடு வில்லைகளைப் படைக்கும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது காப்புரிமைக்கு விண்ணப்பித்து, 100 க்கும் மேற்பட்ட தொடு வில்லைகளை தயாரித்தார். இவர் பல புதிய முன்மாதிரி இயந்திரங்களை [1] மெர்கூர் பொம்மைகளைப்] பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான சுழல்களுடன் உருவாக்கினார். அதற்கு தனது கிராமபோனில் இருந்து எடுக்கப்பட்ட வலுவான மோட்டார் தேவைப்பட்டது. இந்த அடிப்படை சாதனங்கள் மூலம், 1962இன் முதல் நான்கு மாதங்களில், விச்டர்லேயும் இலிண்டா வும் 5,500 லென்ஸ்களை உருவாக்கினர். தொடக்கால சோதனை தொடு வில்லைகள் 'கெல்டாக்ட்' என்றும், பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட தொடு வில்லைகள் 'இசுபோபாலென்சு' என்றும் அழைக்கப்பட்டன.

கூகுள் டூடிள்[தொகு]

27 அக்டோபர் 2021 அன்று, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடிலுடன் விச்டெர்லின் 108வது பிறந்தநாளைக் கொண்டாடியது.[2]

வெளியீடுகள்[தொகு]

  • Allgemeine organische Chemie, Berlin : Akademie-Verlag, 1955, 2nd ext. ed. 1959

சான்றுகள்[தொகு]

  1. https://web.archive.org/web/20111213065704/http://www.merkurtoys.cz/en/wichterle-machine-prototype-of-merkur
  2. "Otto Wichterle's 108th Birthday". www.google.com (in ஆங்கிலம்). 2021-10-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டோ_விச்டர்லே&oldid=3365302" இருந்து மீள்விக்கப்பட்டது