ஓட்டோ பேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1952 ஆம் ஆண்டு பாலியூரித்தேன் பற்றி ஓட்டோ பேயர் விவரிக்கிறார்

ஓட்டோ பேயர் (Otto Bayer) என்பவர் செருமன் நாட்டைச் சேர்ந்த ஐ.கி பார்பென் என்ற வேதியியல் நிறுவனத்தில் இவர் ஒரு தொழிற்துறை வேதியியலாளர் ஆவார். 1903 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இவர் பிறந்தார். ஐசோசயனேட்டு மற்றும் பாலியால் சேர்மங்களிலிருந்து பாலியூரித்தேன்களைத் தயாரிக்கும் பலகூட்டு வினையை 1937 ஆம் ஆண்டு கண்டுபிடித்த ஆராய்ச்சிக் குழுவிற்கு ஓட்டோ பேயர் தலைவராக இருந்தார். [1]

பேயர் கார்ப் நிறுவனத்தை நிறுவிய குடும்பத்துடன் டாக்டர் பேயர் தொடர்புடையவர் அல்ல. இன்று பாலியூரிதீன் நவீன வாழ்க்கை முழுவதும் எங்கும் காணப்படுகிறது. இயக்குனர்கள் குழு மற்றும் பேயர் நிறுவனம்|பேயர் நிறுவனத்தின்]] மேற்பார்வைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார், மேலும் 1950 ஆம் ஆண்டுகளில் காசெல்லாவின் மேற்பார்வைக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

1975 ஆம் ஆண்டுக்கான சார்லசு குட்இயர் பதக்கத்தைப் பேயர் பெற்றார். [2] 1982 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 01 ஆம் நாள் இவர் இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bayer, Otto (1947). "Das Di-Isocyanat-Polyadditionsverfahren (Polyurethane)". Angewandte Chemie 59: 257–272. doi:10.1002/ange.19470590901. ; See also German Patent 728.981 (1937) I.G. Farben
  2. "Charles Goodyear Medalists". American Chemical Society Rubber Division. மூல முகவரியிலிருந்து 2016-03-09 அன்று பரணிடப்பட்டது.
  3. "Deutsches Kunststoff Museum: Otto Bayer". German Plastic Museum.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டோ_பேயர்&oldid=2965730" இருந்து மீள்விக்கப்பட்டது