ஓட்டோனன்
ஓட்டோனன் (Otonan) என்பது இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் பாலி இந்து சமய பிறப்புச் சடங்கு (சம்பிரதாய பிறந்தநாள் ) ஆகும்.
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அல்லது 210 நாட்களுக்குப் பிறகு, இந்த விழா பாலி மக்களின் பவுகோன் நாட்காட்டியின்படி, [1] சப்த வாரத்தின் போதோ அல்லது பஞ்ச வாரத்தின் போதோ நடத்தப்படுகிறது. [1] இந்தச் சடங்கின் நோக்கம், முன்னோர்களுக்கும் அசிந்தியன் தெய்வத்திற்கும் நன்றித் தெரிவிப்பதன் மூலம், முந்தைய பிறப்பின் தவறுகளையும் தீமைகளையும் சரிசெய்து, மிகச் சரியான வாழ்க்கையை அடைவதாகும். [2] இது ஒரு இந்து பூசாரி அல்லது குடும்பப் பெரியவரால் முன்னின்று நடத்தப்படுகிறது. [3]
முதல் ஓட்டோனன் விழாவின் போது, பொதுவாக முடி இறக்குதல் சடங்கு நடத்தப்படுகிறது. பொதுவாக விழா மிகவும் விமர்சையானதாக இருக்கும். [4] இந்த விழா அந்த மனிதரின் வாழ்நாள் முழுவதும் அவரின் பிறந்தநாளுடன் இணைந்து கொண்டாடப்படும். [5]
ஓட்டோனன் விழா முடிந்ததும் "பெனெங்" என்று அழைக்கப்படும் வெள்ளை நூல் கையில் அணிவிக்கப்படும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Menebus Kesalahan dalam Upacara Otonan". bali.panduanwisata.com. Retrieved 14 June 2014.
- ↑ "Upacara Otonan". wisatadewata.com. Retrieved 14 June 2014.
- ↑ 3.0 3.1 "Birth Hereditary: Understanding the Significance of the Balinese Otonan Ceremony". whatsnewindonesia.com. Retrieved 2024-05-24."Birth Hereditary: Understanding the Significance of the Balinese Otonan Ceremony". whatsnewindonesia.com. Retrieved 2024-05-24.
- ↑ "Otonan - Optimum Bali - News". Optimum Bali (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-20. Retrieved 2024-05-24.
- ↑ "Baby's Three-Month Ritual in Balinese Hindu Tradition – Allabali.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-29. Retrieved 2024-05-24.