ஓட்டேராவின் வினையூக்கி
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஆக்டாபியூட்டைல்டெட்ராதயோசயனேட்டோசிடானாக்சேன் | |
| இனங்காட்டிகள் | |
| 95971-03-2 | |
| ChemSpider | 17621074 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16689150 |
| |
| பண்புகள் | |
| C36H72N4O2S4Sn4 | |
| வாய்ப்பாட்டு எடை | 1,196.08 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓட்டேராவின் வினையூக்கி (Otera's catalyst) சப்பானிய வேதியியலாளர் இயூன்சோ ஓட்டேராவின் பெயரால் அழைக்கப்படுகிறது. C36H72N4O2S4Sn4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இந்த கரிமவெள்ளீய சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இது மாற்றுயெசுத்தராக்கல் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐசோதயோசயனேட்டு வகை சேர்மமான இச்சேர்மம் வாடா மற்றும் சக ஊழியர்களால் அறிவிக்கப்பட்ட கரிமவெள்ளீயச் சேர்மங்களின் குடும்பத்தில் இடம்பெறுகின்றது.[1] ஓட்டேரா மற்றும் சக ஊழியர்களால் விரிவாக விளக்கப்பட்டது.[2]
தயாரிப்பு
[தொகு]இவ்வகுப்புச் சேர்மங்களை, பொதுவாக ஒரு கரிம-வெள்ளீய ஆலைடுடன் ஆக்சைடு ஒன்றை சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்:[3]
- 2 R2SnO + 2 R2SnX2 → (XR2SnOSnR2X)2
குறிப்பாக, டைபியூட்டைல்வெள்ளீய ஆக்சைடுடன் டைபியூட்டைல்வெள்ளீயம் டை ஐசோதயோசயனேட்டு வினைபுரிவதன் மூலம் இத்தயோசயனேட்டு சேர்மம் தயாரிக்கப்பட்டது. [1] மாறாக, இச்சேர்மம் வணிகரீதியாகக் கிடைப்பதில்லை.
பயன்பாடுகள்
[தொகு]இந்த தயோசயனேட்டு சேர்மம் ஒரு மாற்றுயெசுத்தராக்கல் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] பரவலாக அறியப்படாத ஒன்றாக இருப்பினும், பல முழுமையான தொகுப்பு வினைகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4][5]
இச்செயல்முறையில், பாலமாகச் செயல்படும் ஐசோ தயோசயனேட்டு ஈந்தணைவிகள் உள்ளே வரும் ஆல்ககாலால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, ஆல்ககால்-பாலமிட்ட ஒரு வினைத்திறன் மிக்க வினையூக்கி உருவாகிறது. இதில் வெள்ளீயம் ஓர் இலூயிசு அமிலமாகச் செயல்பட்டு, எசுடர் மாற்ற வினைக்குட்பட்ட விளைபொருளைத் தருகிறது.[2][3] வினையூக்கி மையத்தில் அமிலத்தையும் ஆல்ககாலையும் ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதற்காக, இவ்வினையானது முனைவற்ற கரைப்பான்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Wada, M.; Nishino, M.; Okawara, R. (1965). "Preparation and properties of dialkyltin isothiocyanate derivatives". J. Organomet. Chem. 3: 70–75. doi:10.1016/S0022-328X(00)82737-0.
- 1 2 3 Otera, J (1991). "Novel template effects of distannoxane catalysts in highly efficient transesterification and esterification". J. Org. Chem. 56 (18): 5307–5311. doi:10.1021/jo00018a019.
- 1 2 Otera, Junzo. (1993). "Transesterification". Chem. Rev. 93 (4): 1449–1470. doi:10.1021/cr00020a004.
- ↑ Trost, BM (2005). "Synthesis of Amphidinolide P". J. Am. Chem. Soc. 127 (50): 17921–17937. doi:10.1021/ja055967n. பப்மெட்:16351124.
- ↑ Trost, BM; Stiles, DT (2007). "Total Synthesis of Spirotryprostatin B via Diastereoselective Prenylation". Org. Lett. 9 (15): 2763–6. doi:10.1021/ol070971k. பப்மெட்:17592853.
- ↑ Stiles, Dylan (3 May 2006). "falling in love with otera's catalyst". Tenderblog. Archived from the original on 27 July 2006. Retrieved 4 January 2025.