ஓடைப்பட்டி கிராமம்
Appearance
ஓடைப்பட்டி (Odaipatty) இந்தியா-தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் முக்கிய வேலையாக பெரும்பாலும் காய்கறிகளான: தக்காளி, முருங்கை, கத்தரி, வெண்டைக்காய், சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சாகுபடி/வேளாண்மை செய்யப்படுகிறது. காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடமான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, தமிழ்நாட்டின் பிரபலமான சந்தையாகும் மற்றும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
மக்கட்தொகைப் பரவல்
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இஙு 13,892 மக்கள் உள்ளனர். ஆண்கள் 49.8% பெண்கள் 50.2 % பேர் உள்ளனர். கல்வியறிவு வீதம் 69.8% ஆகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Office of the Registrar General & Census Commissioner, India 2011 Census Data". Census of India Website : Office of the Registrar General. Census Commission of India. Retrieved 2019-06-18.