ஓடிநட்சித்திர மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓடி நட்சத்திர மீன் ஆழ்கடல்வாழ் உயிரினம் ஆகும். இது புறத்தோலில் முட்கள் உடையது. கற்கள் கடல் புற்களில் ஒளிந்திற்கும்.இரவில் வெளிவரும்.ஒளிரும் தன்மை உடையது.

பண்புகள்[தொகு]

தசையால் நீரை வெட்டிச் செல்லும்.மண் பகுதியில் வளை தோண்டும் .400மீ ஆழமான பகுதியில் வாழும்.

உடலமைப்பு[தொகு]

அளவில் சிறியவை.வட்ட வடிவிலானவை .ஐந்து கைகள், ஐந்து கணுக்களை உடையது .பாம்பு நட்சத்திர மீன் என்ற மறுபெயரும் உண்டு. சில இனங்கள் நச்சுவடையவை.நட்சத்திர மீன்களுடன் காணப்படும் .வாய் பகுதியை சுற்றி ஐந்து தாடைகள் கீழ் அமைந்துள்ளது.கைகள் தாடை பகுதி வரை உள்ளது.ஊர்ந்து செல்லும் போது ஏறுபடுகின்ற அசைவுகளால் நீந்தி செல்கின்றன.

உணவு[தொகு]

நீர் தளத்தில் காணப்படும் துணுக்குகள் ,மட்கிய பொருள்கள் ,இறந்த அல்லது சிறிய உயிரினகளை உட்கொள்கிறது .உணவு பொருட்களை வடிகட்டி , தின்று வாழுதல் முறையில் உட்கொள்ளும் .உட்பக்கமாக காணப்படும் சுரபியினால் மூச்சு விடுகிறது. உணர்வுக் கலங்கள் உணர்வு உறுப்பாக செயல்படும்.ஒளியை விட்டு அகன்று செல்லும் தன்மை கொண்டது.

இனப்பெருக்கம்[தொகு]

உடல் பிளவுபட்டு பாலிலி இனப்பெருக்கம் நடைபெறும் .ஆண் பெண் தனித்தனியாக காணப்படுகிறது..முதலில் ஆணாகவும் பின்னர் பெண்ணாகவும் வாழுந்து மடிகின்றன. பாலினக் கலங்கள் வெளியேற கடல் நீரில் கருத்தரிக்கின்றன. 2000 வகை மீன்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்யம் தொகுதி 6


மேலும் படிக்க[தொகு]

Kupriyanova, E.K.; Vinn, O.; Taylor, P.D.; Schopf, J.W.; Kudryavtsev, A.B.; Bailey-Brock, J. (2014). "Serpulids living deep: calcareous tubeworms beyond the abyss". Deep-Sea Research Part I 90: 91–104. doi:10.1016/j.dsr.2014.04.006. Bibcode: 2014DSRI...90...91K.

வெளி இணப்புகள்[தொகு]

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம் மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடிநட்சித்திர_மீன்&oldid=3725180" இலிருந்து மீள்விக்கப்பட்டது