ஓடச்சிக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓடச்சிக்கோட்டை என்பது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற ஒரு கோட்டையாகும். இது மார்த்தாண்டம்- தேங்காய்ப்பட்டணம் சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து தெற்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கல்லாலான ஓர் அரணாகும். தற்போது மிகவும் சிதலமடைந்துள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்புள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் தாய் இராணி ஓடச்சி இங்கு வசித்ததால் இப்பெயர் பெற்றதாகத் தெரிகிறது. இராணி ஓடச்சிக்கு பல காலம் குழந்தை இல்லாத நிலையில், ஓர் வழிபாட்டு ஆசானின் அறிவுரைப்படி, அவர் மதுரையிலிருந்து முன்சிரை வந்து, அங்குள்ள இறைவன் திருமலையப்பனை வழிபட்டதாகவும் மரபுக்கதை தெரிவிக்கிறது. அப்பொழுதுதான் இராணி தங்குவதற்கு இக்கோட்டை கட்டப்பட்டதாகவும் இறையருளால் இராணி ஒரு மகனைப் பெற்றாள் என்றும் அம்மகனுக்கு திருமலை என பெயர் சூட்டியதாவும் கூறப்படுகிறது. திருமலை நாயக்கர் மதுரை மன்னராக முடிசூட்டப்பட்டதும் இங்குள்ள கோவிலுக்கு ஒரு தங்க மணிமுடி மற்றும் பல மதிப்புள்ள பொருட்களையும் மனமுவந்து அளித்ததாகவும் கூறுவர்.

ஆதாரம்[தொகு]

இந்திய விவரச் சுவடி.-தமிழ்நாடு மாநிலம்-அரசு வெளியீடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடச்சிக்கோட்டை&oldid=3167303" இலிருந்து மீள்விக்கப்பட்டது