ஓசுல்யாபியா
Appearance
ஒசுலியாபியா துனீசியாவின் பைசர்டில் இருந்து புறப்படல், 1903
| |
கப்பல் (உருசியப் பேரரசு) | |
---|---|
பெயர்: | "ஒசுலியாபியா" |
கட்டியோர்: | அட்மிரால்ட்டி, சென் பீட்டர்ஸ்பேர்க் |
செலவு: | 11,340,000 ரூபிள் |
துவக்கம்: | 21 நவம்பர் 1895 |
வெளியீடு: | 8 நவம்பர் 1898 |
பணிக்காலம்: | 1903 |
விதி: | 1905 மே 17 இல் சுசீமா போரில் மூழ்கியது |
ஓசுலிபியா (Oslyabya, உருசியம்: Ослябя) என்பது உருசியப் பேரரசின் கடற்படைக்காக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டுமானம் செய்யப்பட்ட மூன்று போர்க் கப்பல்களில் இரண்டாவதாகும். இக்கப்பல் 1904-05 காலப்பகுதியில் உருசிய-சப்பானியப் போர்க் காலத்தில் தொலை கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது பசிபிக் படையினருக்காக சேவையாற்றியது. இக்கப்பல் 1905 மே 27 அன்று சுசீமா போரின் போது கடலில் மூழ்கியது. வெறும் கடற்படையின் துப்பாக்கி தாக்குதலில் மட்டுமே மூழ்கிப்போன முதல் முழு இரும்பு கப்பல் இதுவே ஆகும்.[1] இறந்தவர் எண்ணிக்கை பற்றிய தகவல் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், பாதி எண்ணிக்கைக்கு மேல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Forczyk, Robert (2009). Russian Battleship vs Japanese Battleship, Yellow Sea 1904–05. Oxford, UK: Osprey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-330-8.