ஓசுலோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுலோ பல்கலைக்கழகம்
University of Oslo
(The Royal Frederick University)
Universitetet i Oslo
(Det Kongelige Frederiks Universitet)
University of Oslo logo.png
இலத்தீன்: Universitas Osloensis
(Universitas Regia Fredericiana)
வகைபொதுநிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1811
தலைமை ஆசிரியர்ஓலெ பெட்டெர் ஓட்டர்சன் (2009-)
(Ole Petter Ottersen) (2009-)
கல்வி பணியாளர்
3,212 (2010)
நிருவாகப் பணியாளர்
2,598 (2010)
மாணவர்கள்27,628 (2010)
அமைவிடம்ஓசுலோ, நோர்வே
சேர்ப்புEUA
இணையதளம்www.uio.no

ஓசுலோ பல்கலைக்கழகம் (நோர்வே மொழி:Universitetet i Oslo), நோர்வேயிலேயே மிகப் பழைய பல்கலைக்கழகம். இதுவே நோர்வேயின் உயர்படிப்புக்கான மிகப்பெரிய பல்கலைக்கழகமும் ஆகும். இது முன்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகம் (Det Kongelige Frederiks Universitet) என்றழைக்கப்பட்டது. இது நோர்வேயின் தலைநகரான ஓசுலோ நகரில் அமைந்துள்ளது. வட ஐரோப்பாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. உலகத் தர வரிசையில், ஒரு கணிப்பின் படி, 67 ஆவதாக உள்ள பல்கலைக்கழகம்[1]

இப்பல்கலைக்கழகத்தில் சற்றேறக்குறைய 27,700 மாணவர்கள் உள்ளனர், இங்கே 6000 பேர் பணியில் இருக்கின்றனர். இங்கே இலூதரியம் சார்ந்த இறையியல் (இது நோர்வேயின் நாட்டுச் சமயமாக 1536 முதல் உள்ளது), சட்டவியல், மருத்துவம், மாந்த வாழ்வியல், கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல், பல்மருத்துவம், கல்வியியல் ஆகிய துறைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் தொடக்ககால புதுச்செம்மரபு வளாகம் ஓசுலோ நகரின் மையத்தில் உள்ளது. இது தற்பொழுது சட்டவியல் படிப்புத்துறையினர் இருக்கும் இடமாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் மற்ற துறைகள் பெரும்பாலும் ஓசுலோவின் மேற்கு எல்லை புறநகர் பகுதியில் உள்ள புதிய பிளிண்டர்ண் (Blindern) வளாகத்தில் அமைந்துள்ளது. மருத்துவத்துறை பல மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் பலவாகப் பிரிந்து உள்ளது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Havnes, Heljar (17 August 2012). "Slik rangeres norske universiteter". Universitas (Norwegian). 8 மார்ச் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 November 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)

நூல்கள் கட்டுரைகள்[தொகு]

  • John Peter Collett: Historien om Universitetet i Oslo, Universitetsforlaget 1999

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 59°56′23.77″N 10°43′19.43″E / 59.9399361°N 10.7220639°E / 59.9399361; 10.7220639

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுலோ_பல்கலைக்கழகம்&oldid=3580173" இருந்து மீள்விக்கப்பட்டது