உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்கார் சிங் கல்காத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர் ஜெனரல்

ஓங்கார் சிங் கல்காத்
பிறப்பு1917/1918
இறப்பு3 டிசம்பர் 2004 (அகவை 86)
சேவை/கிளைபிரித்தானிய இந்தியா
இந்தியா
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
தரம், மேஜர் ஜெனரல்
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள்
பரம் விசிட்ட சேவா பதக்கம்[1]
பிள்ளைகள்3

மேஜர் ஜெனரல் ஓங்கார் சிங் கல்காத் (Major–General Onkar Singh Kalkat), பரம் விசிட்ட சேவா பதக்கம், (பிறப்பு:1917/1918-இறப்பு:3 டிசம்பர் 2004) பிரித்தானிய இந்தியா மற்றும் இந்தியத் தரைப்படையில் பணியாற்றிய இராணுவ அதிகாரி ஆவார். இவர் இரண்டாம் உலகப் போர் (பர்மா) 1939-45, இந்தியா-பாகிஸ்தான் போர், 1947 மற்றும் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். மேஜர் ஜெனரல் ஓங்கார் சிங் கல்காத் இந்தூர் இராணுவப் போர்க் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக இருந்த போது, 1972ல் தமது 54வது அகவையில் இராணுவப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்தில் இரண்டு ஆண்டுகள் உளவு அதிகாரியாக பணி புரிந்தார்.[2]

பெற்ற விருதுகள்[தொகு]

எழுதிய நூல்கள்[தொகு]

  • The Far-Flung Frontiers by Major-General O.S. Kalkat - 1983[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raghavan, V. R. (1997). Infantry in India. Vikas Publishing House. p. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125904847.
  2. 2.0 2.1 Bobb, Dilip (6 August 2013). "Armed forces top brass and autobiographical account of their careers". India Today.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்கார்_சிங்_கல்காத்&oldid=3749287" இலிருந்து மீள்விக்கப்பட்டது