ஓகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓகா
ஓகா துறைமுகம்
நகரம்
ஓகா is located in Gujarat
ஓகா
ஓகா
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஓகாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°28′0″N 69°4′0″E / 22.46667°N 69.06667°E / 22.46667; 69.06667ஆள்கூறுகள்: 22°28′0″N 69°4′0″E / 22.46667°N 69.06667°E / 22.46667; 69.06667
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்தேவபூமி துவாரகை
பரப்பளவு
 • மொத்தம்5
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்62
 • அடர்த்தி12
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் 361350
வாகனப் பதிவுGJ-37
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஓகா துறைமுக நகரமும், பேட் துவாரகை தீவும்

ஓகா (Okha), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில், தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கட்ச் வளைகுடாவில் அமைந்த நகராட்சியுடன் கூடிய துறைமுக நகரம் ஆகும். ஓகா நகரத்திற்கு தெற்கில் துவாரகை 30 கிமீ தொலைவிலும் மற்றும் பேட் துவாரகை தீவு 3 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கடுப்பின் படி ஓகா நகரத்தின் மக்கள்தொகை 62,052 ஆகும். [1]

வரலாறு[தொகு]

1909ல் பரோடா அரசின் அம்ரேலி கோட்டத்தில் ஓகா

பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கெயிக்வாட் வம்ச பரோடா சமஸ்தானத்தின் கீழ், (1721 – 1947) துவாரகை, சோமநாதபுரம் மற்றும் ஓகாவும், இந்திய விடுதலை வரை இருந்தது.

பொருளாதாரம்[தொகு]

ஓகா துறைமுகம், குஜராத்

பாகிஸ்தான் நாட்டிற்கு அருகே அமைந்த ஓகா துறைமுக நகரத்தில் இந்தியக் கடற்படை , இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய சுங்கத் துறை மற்றும் குஜராத் மாநில காவல் துறையின் கடலோரக் காவற்படையின் மையங்கள் செயல்படுகிறது. [2] ஓகா அனல் மின் நிலையத்திற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து ஓகா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓகாவின் முக்கியத் தொழில்கள் மீன் பிடித்தல் மற்றும் சுரங்க உப்பு உற்பத்தியாகும்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஓகா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 62,052 ஆகும். அதில் ஆண்கள் 31,999 ஆகவும்; பெண்கள் 30,053 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8450 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 67.59% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 68.29%, இசுலாமியர் 31.33%, பிற சமயத்தவர்கள் 0.38% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து[தொகு]

3 நடைமேடைகள் கொண்ட ஓகா தொடருந்து நிலையத்திலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை, எர்ணாகுளம், வாரணாசி, புரி, சோமநாதபுரம், துவாரகை, ஜெய்ப்பூர், ஹவுரா, குவகாத்தி மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது. [4]

ஓகாவிலிருந்து செல்லும் 551 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 51, துவாரகை வழியாக பவநகரை இணைக்கிறது.[5]

அருகில் உள்ள விமான நிலையம் 100 கிமீ தொலைவில் உள்ள ஜாம் நகரில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகா&oldid=2605418" இருந்து மீள்விக்கப்பட்டது