ஓகன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓகன் ஆறு
அமைவு

ஓகன் ஆறு (Ogan River) இந்தோனேசியாவில் தெற்கு சுமத்திரா மாகாணத்தில் பாயும் ஒரு ஆறாகும்.[1]

இந்த ஆறு தெற்கு சுமாத்திராவில் பாயும் முசி ஆற்றின் துணை ஆறாகும். இது புகிட் பேரிசான் மலைத்தொடரில் தோன்றி முழுவதுமாக தெற்கு சுமாத்திராவில் பாய்ந்து மெதுவாக கிழக்கு நோக்கி வளைந்து பலெம்பாங்கில் கேட்ராபடி என்றுமிடத்தில் முசி ஆற்றுடன் இணைகிறது.  இந்த ஆறு தெற்கு சுமத்திராவில் முசி மற்றும் கோமெரிங் ஆறுகளுக்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய ஆறு என்ற தரநிலையைப் பெறுகிறது. இந்த ஆறு தெற்கு ஓகு, ஓகு, ஓகி மற்றும் ஓகன் இலிர் ஆகிய பகுதிகளுக்கோ, பகுதிகளின் ஓரங்களுக்கோ  குறுக்காகவோ அல்லது எல்லைகளாகவோ அமையவில்லை.

ஓகன் மற்றும் பெககான் பழங்குடியினர் ஓகன் மற்றும் அதன் கிளையாறுகளின் கரையோரங்களில் வாழ்ந்தார்கள். பெரும்பாலானோர் உழவர்களாகவோ அல்லது வணிகர்களாகவோ இருந்தனர். இந்த ஆறானது அவர்களுக்கு மிகவும் முதலான மற்றும் தலையாய போக்குவரத்து ஊடகமாகவும், தொடர்பு வழியாகவும் சேவையாற்றியது. இந்த ஆற்றின் அடர்ந்த வண்டல் மண் படிவுகளின் காரணமாக உருவாக்கப்பட்ட ஓகன் ஆற்றுப் பள்ளத்தாக்கானது இந்த மாகாணத்தின் மிகச்சிறந்த வளமான விவசாய மண்டலமாக அமைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rand McNally, The New International Atlas, 1993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகன்_ஆறு&oldid=2454230" இருந்து மீள்விக்கப்பட்டது