ஒழுங்குமுறை சட்டம், 1773

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒழுங்குமுறை சட்டம், 1773 (Regulating Act, 1773) இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.[1] ஒழுங்கு முறை சட்ட விதிகள் கிழக்கிந்திய கம்பெனியின் நீதி மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தாத காரணத்தினால், 1784ல் பிட்டின் இந்தியா சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பின்னணி[தொகு]

1773ல் கிழக்கிந்தியக் கம்பெனி நிதிச் சுமையால் தத்தளித்தது.[2]ஐக்கிய இராச்சியத்தின் நுகர்வு பொருட்களை இந்தியத் துணைக் கண்டத்தில் விற்கவும், நறுமணப் பொருட்களை இறக்குமதி செய்யவும், கிழக்கிந்திய கம்பெனி அவசியமாயிற்று.[3]

ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகள்[தொகு]

  • கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களின் பதவிக் காலம் ஒராண்டிலிருந்து நான்காண்டாக உயர்த்தப்பட்டது.[4] அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுவர்.
  • பிரித்தானிய அரசிற்கு கம்பெனி ஆண்டு தோறும் 6% பங்கு ஈவுத்தொகை (dividend) வழங்க வேண்டும்.
  • கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் உள்ளூர் மக்களிடம் வணிகம் செய்வதோ அல்லது பரிசுப் பொருட்கள் அல்லது கையூட்டு வாங்குவது தடை செய்யப்பட்டது.
  • வங்காள இராஜதானியின் ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டதால், பம்பாய் மாகாணம் மற்றும் சென்னை மாகாணங்களின் ஆளுநர்கள் தனித்து இயங்காது, வங்காள ஆளுநரின் கீழ் செயல்பட்டனர்.[4] தலமை ஆளுநர் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
  • இச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் மையப்படுத்தப்பட்ட அரசு நிறுவ காரணமாயிற்று. வங்காள ஆளுநருக்கு நீதி, நிர்வாகம், வணிகம் போன்ற துறைகளில் ஆலோசனை வழங்க நான்கு பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் முடிவில் கருத்து வேறுபாடு இருப்பின் வாக்கெடுப்பின் மூலம் முடிவில் எடுக்கப்படும். இக்குழுவின் தலைவரான தலைமை ஆளுநருக்கும் ஒரு வாக்கு உண்டு.
  • 1774ல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கம்பெனி நிர்வாகத்தினரும் மற்றவர்களும் பிரித்தானிய நீதி முறைகளை கடைப்பிடிக்கவும், வழக்குகளில் தீர்ப்பளிக்கவும், ஒரு தலைமை நீதிபதியும், மூன்று துணை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழுங்குமுறை_சட்டம்,_1773&oldid=3908901" இலிருந்து மீள்விக்கப்பட்டது