ஒழுகினசேரி
Appearance
ஒழுகினசேரி என்பது தமிழ்நாட்டின் தென்மாவட்டமான கன்னியாகுமரியின் தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியாகும். பழையாற்றின் கரையில் இது அமைந்து உள்ளது. நகைச்சுவை நடிகரும் சீர்திருத்தக் கருத்தும் கொண்ட என். எஸ். கிருட்டிணன் பிறந்த ஊர். அருகிலேயே நாகர்கோவிலுக்கு அப்பெயர் வரக் காரணமான நாகராஜா கோவில் உள்ளது. ஆற்றின் கீழ்கரையினை அடுத்து பெரிய காய்கறிச் சந்தை இயங்கி வருகிறது.