ஒளி மாசு
ஒளி மாசு (Light pollution) என்பது தேவையற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளிலிருந்து வெளிப்படும் ஒளியாகும்.[1][2] விளக்கமாகக் கூறுவதானால் ஒளி மாசுபாடு என்பது பகல் அல்லது இரவின் போது, மோசமாகப் பயன்படுத்தப்படும் ஒளி மூலங்களின் விளைவுகளைக் குறிக்கிறது.[3]
இந்த வகை மாசுபாடு பகல் முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும், இரவு வானத்தின் இருளில் தாக்கம் செலுத்துகின்றன. உலகின் 83 விழுக்காடு மக்கள் ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றும், உலகின் 23 சதவிகித நிலப்பரப்பு ஒளிரும் வானத்தால் (Skyglow) பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[4][5] உலகில் செயற்கை வெளிச்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.[6] நகரமயமாக்கலின் பெரும் பக்க விளைவான ஒளி மாசு ஆரோக்கியத்தில் சமரசம் செய்வதாகவும், சுற்றுச்சூழல் சமன்பாட்டைச் சீர்குலைப்பதாகவும், அழகியல் சூழலைக் கெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. நகர்ப்புறங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.[7] உலகளவில், ஒளி மாசு 1992 முதல் 2017 வரை குறைந்தது 49% அதிகரித்துள்ளது.[8]
செயற்கை ஒளியைத் தேவையற்ற அளவில் பயன்படுத்தப்படுவதால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. ஒளி மாசுபாட்டின் வகைகளில் ஒளி அத்துமீறல், அதீத வெளிச்சம், கூசும் ஒளி, ஒளி ஒழுங்கீனம், ஒளிரும் வானம் ஆகியவை அடங்கும். தேவையற்ற செயற்கை ஒளியானது பெரும்பாலும் இந்த வகைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் அடங்கும்.[9][10]
ஒளி மாசுபாட்டிற்கான தீர்வுகள் பெரும்பாலும் ஒளி விளக்குகளைச் சரிசெய்தல் அல்லது மிகவும் பொருத்தமான ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவது போன்ற எளிதான படிகளாகும். சட்டமியற்றி மாற்றத்துக்குத் தூண்டும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக முயற்சிகளைக் மேற்கொண்டு இதைத் தீர்வு காண முடியும்.[11]
வரையறைகள்
[தொகு]ஒளி மாசு என்பது இருண்ட சூழல்களில் மாந்தரால் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளி இருப்பது ஆகும்.[12][13][14][15]
இந்தச் சொல் பொதுவாக வெளிப்புறச் சூழல் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் உட்புறத்தில் உள்ள செயற்கை ஒளியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பல என்றாலும்; அவற்றில் சில இன்னும் அறியப்படாமல் உள்ளன. ஒளி மாசுபாடு நகர்ப்புற மக்களின் இரவு வானின் நட்சத்திர ஒளியை மங்கச் செய்கிறது, வானியல் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.[16] மேலும் மற்ற மாசுபாடுகளைப் போலவே, சூழல் மண்டலத்தையும் சீர்குலைக்கிறது. இதனால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.[17][18] ஒளி மாசுபாடு என்பது தொழில்துறை நாகரிகத்தின் பக்க விளைவாகும். தொழில்துறை நாகரீகத்தின் ஒரு பகுதியான கட்டடங்களின் வெளிப்புற, உட்புற விளக்குகள், விளம்பரம், திறந்த வெளிப்பகுதி விளக்குகள் (வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை), அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தெருவிளக்குகள், ஒளிரும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியவை அடங்கும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் அதிகத் தொழில்மயமாக்கப்பட்ட, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும், மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் தெகுரான், கெய்ரோ போன்ற முக்கிய நகரங்களிலும் இது மிகவும் கடுமையாக உள்ளது. ஒளி மாசுபாட்டின் விளைவுகளால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கியது. ஆனால் அதன் விளைவுகளைச் சரி செய்வதற்கான முயற்சிகள் 1950 கள் வரை தொடங்கவில்லை.[19] 1980களில் சர்வதேச இருண்ட வானச் சங்கம் (ஐடிஏ) நிறுவப்பட்டதன் மூலம் உலகளாவிய இருண்ட-வான இயக்கம் உருவானது. உலகளவில் பல நாடுகளில் இதுபோன்ற கல்வி மற்றும் விழிப்புணர்வு ஊட்டும் நிறுவனங்கள் இப்போது உள்ளன.
99% ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட சுமார் 83% மக்கள், இயற்கையான இருளை விட 10% க்கும் கூடுதலான பிரகாசம் கொண்ட ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கின்றனர். 80% வட அமெரிக்கர்களால் பால் வழி மண்டலத்தைப் பார்க்க முடியாது.[20]
வகைகள்
[தொகு]ஒளி அத்துமீறல்
[தொகு]தேவையற்ற ஒளி ஒருவரின் வாழிடத்தில் நுழையும் போது ஒளி அத்துமீறல் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கத்துவீட்டாரின் வேலியைத் தாண்டி அடுத்த வீட்டின் மீது பிரகாசமான ஒளி பாய்வதன் மூலம் ஒளி அத்துமீறல் நிகழ்கிறது. ஒருவரின் வீட்டின் சாளரத்துக்கு வெளியில் இருந்து பிரகாசமான வெளிச்சம் நுழையும் போது பொதுவாக ஒளி அத்துமீறல் பிரச்சனை ஏற்படுகிறது. இது தூக்கமின்மை போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பல நகரங்கள் தங்கள் குடிமக்களை ஒளி அத்துமீறலிலிருந்து பாதுகாக்க வெளிப்புற விளக்குகளுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளன. அவர்களுக்கு உதவ, சர்வதேச இருள் வான் சங்கம் மாதிரி விளக்கு ஒழுங்குமுறைகளை உருவாக்கியுள்ளது.[21]
சர்வதேச இருள் வான் சங்கம் என்பது நட்சத்திரங்களை நன்கு காண இயலாதவாறு வெளிப்படும் இரவு வெளிச்சத்தைக் குறைக்கத் தொடங்கப்பட்டது. (கீழே உள்ள ஒளிரும் வானம் பகுதியைப் பார்க்கவும்).
அதீத வெளிச்சம்
[தொகு]அதீத வெளிச்சம் என்பது தேவைப்படுவதை விட அதிக்கப்படியான ஒளியைப் பயன்படுத்துவது ஆகும்.[10]
அனைத்து வளர்ந்த நாடுகளிலும் ஒளி பயன்பாடு அதிகமாக இல்லை. வளர்ந்த நாடுகளில் ஒளியைப் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஜெர்மன் நகரங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க நகரங்கள் ஒரு நபருக்கு மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக ஒளியை விண்வெளிக்கு அனுப்புகின்றன.[22]
- அதீத வெளிச்சம் பல காரணிகளிலிருந்து உருவாகிறது
- தவறான வடிவமைப்பு, தேவையானதை விட அதிக அளவிலான ஒளியைக் குவித்தலால்;[23]
- தவறாக பொருத்துதல்கள் அல்லது ஒளி விளக்குகளின் தவறான தேர்வு, அவை தேவைப்படும் பகுதிகளுக்கு ஒளியை செலுத்தாத நிலை;[23]
- ஒளிக்குத் தேவையானதை விட அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் வன்பொருளை முறையற்று தேர்வு செய்தல்;
- விளக்கு அமைப்புகளைத் திறமையாக பயன்படுத்தக் கட்டட மேலாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் போதுமான பயிற்சியின்மை;
- குற்றங்களைத் தடுக்க குடிமக்களும், வாடிக்கையாளர்களை ஈர்க்க கடை உரிமையாளர்களும் "பகல் வெளிச்சம்" போல அதீதமாக விளக்குகளைப் பயன்படுத்ததுதல்;[24]
- அதே மின்னாற்றலைப் பயன்படுத்தி மிகவும் ஒளியுமிழும் எல். ஈ. டிக்களை பழைய விளக்குகளுக்கு மாற்றாக பயன்படுத்துதல்;
- மறைமுக விளக்கு நுட்பங்கள், தரையிலிருந்து மேலே ஒளியைப் பாய்ச்சி செங்குத்து சுவரை ஒளிரச் செய்வது.
- தேவைக்கு மாறாக பொருளாதார மற்றும் நிதி ஆதாயத்துக்காக, நிறுவனங்கள் இயற்கையான பகல் நேரத்தைத் தாண்டி வேலை நேரத்தை நீட்டித்தல்.[25]
கூசும் ஒளி
[தொகு]கூசும் ஒளியானது கண்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்குகிறது. வாகன முகப்பு விளக்கு, தெருவிளக்கு ஆகியவற்றிலிருந்து வரும் ஒளியே இதற்கு எடுத்துக்காட்டு.
மசாசூசெட்ஸ் மருத்துவ சங்கத்தின் தலைவரான மரியோ மோட்டாவின் கூற்றுப்படி, கண்ணை உறுத்தும் ஒளி பொது-சுகாதார ஆபத்தாகும். கண்ணைக் கூசும் ஒளி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது. எதிரே வரும் வாகனத்தின் ஹைபீம் முகப்பு விளக்குளால் எதிரே வரும் வாகனத்தின் விட்டம் போன்றவை தெரியாமல் போகுதல் உண்டு.[26] பிரகாசமான விளக்குகள் ஓட்டுநர்களையும், பாதசாரிகளையும் ஓரளவு குருடாக்கி விபத்துக்களுக்கு காரணமாகிறது.
ஒளிரும் வானம்
[தொகு]ஒளிரும் வானம் என்பது நகரங்களுக்கு மேலே காணப்படும் பிரகாசமான மூடுபனியாகும். இது இரவில் அதிகப்படியான செயற்கை விளக்குகளால் உருவாகிறது.[10] இந்த வகையான ஒளி மாசுபாடானது வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வகையான துகள்கள் மீது நகரங்களில் வெளியிடப்படும் செயற்கை ஒளி எதிரொளிப்பதால் உண்டாகிறது.[27] ஒளிரும் வானமானது வானியல் மற்றும் பல உயிரினங்களின் ஆரோக்கியத்துக்கு எதிரானது ஆகும். இதனால் நட்சத்திரங்கள், பால் வழி போன்றவற்றை தெளிவாகக் காண இயலாமல் தடுக்கிறது. மேலும் இரவில் இயற்கை ஒளியின் அளவைக் கணிசமாக அதிகரிக்கிறது.[28]
விளைவுகள்
[தொகு]ஒளி மாசு மனித உடலில் பல்வேறு உடல் நலச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.[29] ஒளி மாசினால் தலைவலி அதிகரித்தல், பணியாளர் களைப்பு, மருத்துவ ரீதியாக வரையறுக்கப்பட்ட மன அழுத்தம், பாலியல் செயல்பாடு குறைதல், மனக்கவலை அதிகரித்தல் போன்றவை உண்டாகின்றன.[30][31][32][33][34]
இரவில் வெளிப்புற செயற்கை விளக்குகளால் ஏற்படும் ஒளிமாசினால் உடல் பருமன்,[35] மனநலக் கோளாறுகள்,[36] நீரிழிவு நோய்,[37] மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள்[38] போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.[39]
பல ஆய்வுகள் இரவில் பணிபுரிதலுக்கும் மார்பக மற்றும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அதிகரித்தலுக்கும் இடையிலான தொடர்பை ஆவணப்படுத்தியுள்ளன.[40][41][42][43][44][45]
சூரியன் மறைந்து, வெளிச்சம் குறையும்போது, மனித உடலில் இயற்கையாகவே மெலடோனின் என்கிற இயக்கு நீரைச் சுரக்கிறது. இந்த மெலடேசின் மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து வெளிப்பட்டு, மனித உடலில் சோர்வை அதிகரித்து தூக்க சுழற்சியை சீராக்குகிறது. ஆனால் ஒளி மாசானது மெலடோனின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது தூக்கமின்மையை ஏற்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.[46]
சுற்றுச்சூழல் பாதிப்பு
[தொகு]இரவில் வெளிச்சம் உயிரினங்களில் சில இனங்களுக்கு நன்மை பயப்பதாகவும், சிலவற்றிற்கு தீமை விளைவிப்பதாகவும் உள்ளது. குறிப்பாக ஒளி மாசு எப்போதும் சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தொந்தரவு செய்கிறது. எடுத்துக்காட்டாக, சில வகையான சிலந்திகள் ஒளியுள்ள பகுதிகளைத் தவிர்க்கின்றன, மற்ற இனங்கள் தங்கள் வலைகளை நேரடியாக விளக்கு கம்பங்களில் உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகின்றன. விளக்குக் கம்பங்கள் பல பறக்கும் பூச்சிகளை ஈர்ப்பதால், ஒளியை விரும்பும் சிலந்திகள் அதைத் தவிர்க்கும் சிலந்திகளை விட ஒரு நன்மையைப் பெறுகின்றன. இரவில் பாய்ச்சும் செயற்கை ஒளியினால் உணவுச் சுழற்சி எவ்வாறு தொந்தரவு செய்யப்படுகின்றது என்பதற்கு இது ஒரு எளிய எடுத்துக்காட்டு.
ஏரிகளைச் சுற்றிக் காணப்படும் ஒளி மாசுபாடு டாப்னியா போன்ற ஜூப்ளாங்க்டனை மேற்பரப்பு அல்காவை சாப்பிடுவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாசித்திரள் மிகுந்து அது ஏரிகளின் பிற தாவரங்களை அழித்து நீரின் தரத்தை குறைக்கும்.[47] ஒளி மாசுபாடு சுற்றுச்சூழல் அமைப்புகளை வேறு வழிகளிலும் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, பூச்சியியல் வல்லுநர்கள் இரவுநேர ஒளி அந்துப்பூச்சிகள் மற்றும் பிற இரவாடிப் பூச்சிகளின் இரவு நடமாட்டத்தில் குறுக்கிடக்கூடும் என்று ஆவணப்படுத்தியுள்ளனர்.[48] இது பூச்சி வளர்ச்சி, இனப்பெருக்கம் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.[49] இதனால் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்ட தாவரங்களின் இனங்கள் குறைவதற்கு வழிவகுக்கும். மேலும் நீண்ட கால சூழலியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.[50]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Light Pollution". International Dark-Sky Association (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ Smith, Keith T.; Lopez, Bianca; Vignieri, Sacha; Wible, Brad (2023). "Losing the darkness". Science 380 (6650): 1116–1117. doi:10.1126/science.adi4552. பப்மெட்:37319220. Bibcode: 2023Sci...380.1116S.
- ↑ "All You Need to Know About Light Pollution". Stanpro (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-18. Archived from the original on 2021-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ Falchi, Fabio; Cinzano, Pierantonio; Duriscoe, Dan; Kyba, Christopher C. M.; Elvidge, Christopher D.; Baugh, Kimberly; Portnov, Boris A.; Rybnikova, Nataliya A. et al. (2016-06-01). "The new world atlas of artificial night sky brightness". Science Advances 2 (6): e1600377. doi:10.1126/sciadv.1600377. பன்னாட்டுத் தர தொடர் எண்:2375-2548. பப்மெட்:27386582. Bibcode: 2016SciA....2E0377F.
- ↑ Pain, Stephanie (March 23, 2018). "There goes the night". Knowable Magazine (Annual Reviews). doi:10.1146/knowable-032218-043601. https://www.knowablemagazine.org/article/living-world/2018/there-goes-night. பார்த்த நாள்: March 26, 2018.
- ↑ Kyba, Christopher C. M.; Kuester, Theres; Sánchez de Miguel, Alejandro; Baugh, Kimberly; Jechow, Andreas; Hölker, Franz; Bennie, Jonathan; Elvidge, Christopher D. et al. (November 2017). "Artificially lit surface of Earth at night increasing in radiance and extent". Science Advances 3 (11): e1701528. doi:10.1126/sciadv.1701528. பப்மெட்:29181445. Bibcode: 2017SciA....3E1528K.
- ↑ Han, Pengpeng; Huang, Jinliang; Li, Rendong; Wang, Lihui; Hu, Yanxia; Wang, Jiuling; Huang, Wei (16 June 2014). "Monitoring Trends in Light Pollution in China Based on Nighttime Satellite Imagery" (in en). Remote Sensing 6 (6): 5541–5558. doi:10.3390/rs6065541. பன்னாட்டுத் தர தொடர் எண்:2072-4292. Bibcode: 2014RemS....6.5541H.
- ↑ Sánchez de Miguel, Alejandro; Bennie, Jonathan; Rosenfeld, Emma; Dzurjak, Simon; Gaston, Kevin J. (January 2021). "First Estimation of Global Trends in Nocturnal Power Emissions Reveals Acceleration of Light Pollution" (in en). Remote Sensing 13 (16): 3311. doi:10.3390/rs13163311. பன்னாட்டுத் தர தொடர் எண்:2072-4292. Bibcode: 2021RemS...13.3311S.
- ↑ Kaushik, Komal; Nair, Soumya; Ahamad, Arif (September 2022). "Studying light pollution as an emerging environmental concern in India". Journal of Urban Management 11 (3): 392–405. doi:10.1016/j.jum.2022.05.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:2226-5856. http://dx.doi.org/10.1016/j.jum.2022.05.012.
- ↑ 10.0 10.1 10.2 Chepesiuk, Ron (1 January 2009). "Missing the Dark: Health Effects of Light Pollution" (in en). Environmental Health Perspectives 117 (1): A20-7. doi:10.1289/ehp.117-a20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-6765. பப்மெட்:19165374.
- ↑ Zielińska-Dabkowska, Karolina M.; Xavia, Kyra; Bobkowska, Katarzyna (2020). "Assessment of Citizens' Actions against Light Pollution with Guidelines for Future Initiatives" (in en). Sustainability 12 (12): 4997. doi:10.3390/su12124997.
- ↑ Verheijen, F. J. (1985). "Photopollution: Artificial light optic spatial control systems fail to cope with. Incidents, causation, remedies". Experimental Biology 44 (1): 1–18. பப்மெட்:3896840. https://archive.org/details/sim_federation-of-american-soc-experimental-biology_1985-01_44_1/page/1.
- ↑ Cinzano, P.; Falchi, F.; Elvidge, C. D.; Baugh, K. E. (2000). "The artificial night sky brightness mapped from DMSP Operational Linescan System measurements". Monthly Notices of the Royal Astronomical Society 318 (3): 641–657. doi:10.1046/j.1365-8711.2000.03562.x. Bibcode: 2000MNRAS.318..641C. http://www.lightpollution.it/cinzano/download/mnras_paper.pdf. பார்த்த நாள்: 2010-03-31.
- ↑ Hollan, J: What is light pollution, and how do we quantify it? பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம். Darksky2008 conference paper, Vienna, August 2008. Updated April 2009.
- ↑ Marín, C. and Orlando, G. (eds.) (June 2009) Starlight Reserves and World Heritage பரணிடப்பட்டது 2020-09-27 at the வந்தவழி இயந்திரம். Starlight Initiative, IAC and the UNESCO World Heritage Centre. Fuerteventura, Spain.
- ↑ "Light Pollution and Palomar Observatory". Palomar Observatory: கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் Astronomy. Archived from the original on 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.
- ↑ Khan, Amina (22 November 2017). "Artificial lights are eating away at dark nights—and that's not a good thing". Los Angeles Times. Archived from the original on 11 March 2021. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
- ↑ Lamphar, Héctor; Kocifaj, Miroslav; Limón-Romero, Jorge; Paredes-Tavares, Jorge; Chakameh, Safei Diba; Mego, Michal; Prado, Natalia Jorgelina; Baez-López, Yolanda Angélica et al. (1 February 2022). "Light pollution as a factor in breast and prostate cancer". Science of the Total Environment 806 (Pt 4): 150918. doi:10.1016/j.scitotenv.2021.150918. பப்மெட்:34653461. Bibcode: 2022ScTEn.80650918L.
- ↑ Portree, David. S. F. (2002). "Flagstaff's Battle for Dark Skies". The Griffith Observer (October, 2002).
- ↑ Yong, Ed (2022-06-13). "How Animals Perceive the World". The Atlantic (in ஆங்கிலம்). Archived from the original on 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
- ↑ International Dark-Sky Association. darksky.org
- ↑ Kyba, Christopher; Garz, Stefanie; Kuechly, Helga; de Miguel, Alejandro; Zamorano, Jaime; Fischer, Jürgen; Hölker, Franz (23 December 2014). "High-Resolution Imagery of Earth at Night: New Sources, Opportunities and Challenges". Remote Sensing 7 (1): 1–23. doi:10.3390/rs70100001. Bibcode: 2014RemS....7....1K.
- ↑ 23.0 23.1 Kyba, Christopher C. M.; Mohar, Andrej; Pintar, Gašper; Stare, Jurij (20 February 2018). "Reducing the environmental footprint of church lighting: matching façade shape and lowering luminance with the EcoSky LED". International Journal of Sustainable Lighting 19 (2): 132. doi:10.26607/ijsl.v19i2.80.
- ↑ Over-illumination can be a design choice, not a fault. In both cases target achievement is questionable.
- ↑ "Is Artificial Light Poisoning the Planet?". The New Yorker (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-02-20. Archived from the original on 2023-02-21. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ Motta, Mario (2009-06-22). "U.S. Physicians Join Light-Pollution Fight". news. Sky & Telescope. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2009-06-23.
- ↑ Kaushik, Komal; Nair, Soumya; Ahamad, Arif (September 2022). "Studying light pollution as an emerging environmental concern in India". Journal of Urban Management 11 (3): 392–405. doi:10.1016/j.jum.2022.05.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:2226-5856. http://dx.doi.org/10.1016/j.jum.2022.05.012.
- ↑ Kyba, Christopher C. M.; Tong, Kai Pong; Bennie, Jonathan; Birriel, Ignacio; Birriel, Jennifer J.; Cool, Andrew; Danielsen, Arne; Davies, Thomas W. et al. (2015-02-12). "Worldwide variations in artificial skyglow" (in en). Scientific Reports 5 (1): 8409. doi:10.1038/srep08409. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:25673335. Bibcode: 2015NatSR...5E8409K.
- ↑ Gary Steffy, Architectural Lighting Design, John Wiley and Sons (2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-38638-3.
- ↑ Rajkhowa, Rasna (2014). "Light Pollution and Impact of Light Pollution". International Journal of Science and Research 3 (10): 861–867. https://d1wqtxts1xzle7.cloudfront.net/87472490/T0NUMTQyMTA_-libre.pdf?1655167711=&response-content-disposition=inline%3B+filename%3DLight_Pollution_and_Impact_of_Light_Poll.pdf&Expires=1711526208&Signature=JgCjCdabA5biUDvw1GF7dPaMfpgGGlYOxBIoD4K7sRWbGmAfL0CCWkQPbPD2AM1l8-nfahO0oubK04sdsOT7UUklLAvEOa-Ljel6S2Yah3yI~~nt7PqkK91JO09BB7JXpsFj4l0cUfa0~c6rNno5jAQ-sjnnDU9omC9NrrvqT9zDWxPG5-IYUbfHWg9hXsqKTnTqkafL3FGIg29XtxjVg0rxZhq3J-TaQvaJ-1XWqRGQTJS3R4st-UMUdmtfyhvS0QFoXus7GbKENt6hdgR2uDW76Pfbz~OLlTIg0q1AlttjNw-mi7uTZCH5Lad3Tyb2M1QmwPCvNjWkmxaUqVCtKQ__&Key-Pair-Id=APKAJLOHF5GGSLRBV4ZA. பார்த்த நாள்: 2024-03-27.
- ↑ Burks, Susan L. (1994) Managing your Migraine, Humana Press, New Jersey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89603-277-9.
- ↑ Cambridge Handbook of Psychology, Health and Medicine, edited by Andrew Baum, Robert West, John Weinman, Stanton Newman, Chris McManus, Cambridge University Press (1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-43686-9
- ↑ Pijnenburg, L.; Camps, M. and Jongmans-Liedekerken, G. (1991) Looking closer at assimilation lighting, Venlo, GGD, Noord-Limburg
- ↑ Knez, I (2001). "Effects of colour of light on nonvisual psychological processes". Journal of Environmental Psychology 21 (2): 201–208. doi:10.1006/jevp.2000.0198.
- ↑ Park, Yong-Moon Mark; White, Alexandra J.; Jackson, Chandra L.; Weinberg, Clarice R.; Sandler, Dale P. (1 August 2019). "Association of Exposure to Artificial Light at Night While Sleeping With Risk of Obesity in Women". JAMA Internal Medicine 179 (8): 1061–1071. doi:10.1001/jamainternmed.2019.0571. பப்மெட்:31180469.
- ↑ Tancredi, Stefano; Urbano, Teresa; Vinceti, Marco; Filippini, Tommaso (August 2022). "Artificial light at night and risk of mental disorders: A systematic review". Science of the Total Environment 833: 155185. doi:10.1016/j.scitotenv.2022.155185. பப்மெட்:35417728. Bibcode: 2022ScTEn.83355185T.
- ↑ Zheng, Ruizhi; Xin, Zhuojun; Li, Mian; Wang, Tiange; Xu, Min; Lu, Jieli; Dai, Meng; Zhang, Di et al. (14 November 2022). "Outdoor light at night in relation to glucose homoeostasis and diabetes in Chinese adults: a national and cross-sectional study of 98,658 participants from 162 study sites" (in en). Diabetologia 66 (2): 336–345. doi:10.1007/s00125-022-05819-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-0428. பப்மெட்:36372821.
- ↑ Barentine, John C. (9 June 2022). Artificial Light at Night: State of the Science 2022. International Dark-Sky Association. doi:10.5281/zenodo.6903500. https://www.darksky.org/wp-content/uploads/2022/06/IDA-State-of-the-Science-2022-EN.pdf. பார்த்த நாள்: 17 December 2022.
- ↑ Zielinska-Dabkowska, K. M.; Schernhammer, E. S.; Hanifin, J. P.; Brainard, G. C. (2023). "Reducing nighttime light exposure in the urban environment to benefit human health and society". Science 380 (6650): 1130–1135. doi:10.1126/science.adg5277. பப்மெட்:37319219. Bibcode: 2023Sci...380.1130Z.
- ↑ Schernhammer, ES; Schulmeister, K (2004). "Melatonin and cancer risk: does light at night compromise physiologic cancer protection by lowering serum melatonin levels?". British Journal of Cancer 90 (5): 941–3. doi:10.1038/sj.bjc.6601626. பப்மெட்:14997186.
- ↑ Hansen, J (2001). "Increased breast cancer risk among women who work predominantly at night". Epidemiology 12 (1): 74–7. doi:10.1097/00001648-200101000-00013. பப்மெட்:11138824.
- ↑ Davis, S; Mirick, DK; Stevens, RG (2001). "Night shift work, light at night, and risk of breast cancer". Journal of the National Cancer Institute 93 (20): 1557–62. doi:10.1093/jnci/93.20.1557. பப்மெட்:11604479. http://depts.washington.edu/epidem/Epi591/JNCI%20Editorial.pdf.
- ↑ Schernhammer, ES; Laden, F; Speizer, FE; Willett, WC; Hunter, DJ; Kawachi, I; Colditz, GA (2001). "Rotating night shifts and risk of breast cancer in women participating in the nurses' health study". Journal of the National Cancer Institute 93 (20): 1563–8. doi:10.1093/jnci/93.20.1563. பப்மெட்:11604480.
- ↑ Bullough, JD; Rea, MS; Figueiro, MG (2006). "Of mice and women: light as a circadian stimulus in breast cancer research". Cancer Causes & Control 17 (4): 375–83. doi:10.1007/s10552-005-0574-1. பப்மெட்:16596289. http://www.lrc.rpi.edu/programs/lightHealth/pdf/ofmiceandwomen.pdf. பார்த்த நாள்: 2010-09-29.
- ↑ Kloog, I; Haim, A; Stevens, RG; Portnov, BA (2009). "Global co-distribution of light at night (LAN) and cancers of prostate, colon, and lung in men". Chronobiology International 26 (1): 108–25. doi:10.1080/07420520802694020. பப்மெட்:19142761.
- ↑ "சிறிதும் கவனம் பெறாத ஒளி மாசு". 2024-03-09.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Moore, Marianne V.; Pierce, Stephanie M.; Walsh, Hannah M.; Kvalvik, Siri K.; Julie D. Lim (2000). "Urban light pollution alters the diel vertical migration of Daphnia". Verh. Internat. Verein. Limnol 27 (2): 779. doi:10.1080/03680770.1998.11901341. Bibcode: 2000SILP...27..779M. http://www.wellesley.edu/Biology/Faculty/Mmoore/Content/Moore_2000.pdf. பார்த்த நாள்: 2005-05-29.
- ↑ Frank, Kenneth D. (1988). "Impact of outdoor lighting on moths". Journal of the Lepidopterists' Society 42: 63–93. http://www.darksky.org/infoshts/is109.html.
- ↑ Boyes, Douglas H.; Evans, Darren M.; Fox, Richard; Parsons, Mark S.; Pocock, Michael J. O. (2021). "Is light pollution driving moth population declines? A review of causal mechanisms across the life cycle" (in en). Insect Conservation and Diversity 14 (2): 167–187. doi:10.1111/icad.12447. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-4598.
- ↑ Confirmed: Night Lights Drive Pollinators Away From Plants பரணிடப்பட்டது 2018-07-08 at the வந்தவழி இயந்திரம் The Atlantic, 2017