ஒளிவட்ட மழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
304 ஆம்சுட்ராங் அலைநீளத்தில் ஒளிவட்ட மழையின் ஒரு இயங்கு படம் (சூரியனின் வலப்புறம்). சூரிய இயக்காற்றல் வானாய்வகம் வளிமண்டல படத் திரட்டிக் கருவியின் மூலம் இப்படக்காட்சியை எடுத்துள்ளது. சூரிய இயக்காற்றல் வானாய்வகம் எடுத்துள்ள இக்காட்சியின் ஒவ்வொரு சட்டமும் 12 வினாடிகளில் சேமிக்கப்பட்டக் காட்சிக்குச் சமமாகும். எனவே இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உண்மையான ஆறு நிமிடங்களுக்குச் சமமாகும். இப்படம் சூலை 19 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 4.30 மணி தொடங்கி சூலை 20 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 2.00 மணி வரையிலான 21 மணி 30 நிமிடங்கள் காலத்தை உள்ளடக்கியது ஆகும்

ஒளிவட்ட மழை (Coronal rain) என்பது சூரியனின் ஒளி வளையத்தில் தோன்றும் ஒரு நிகழ்வு ஆகும். ஒளி வளையத்தில் உள்ள சூடான பிளாசுமா குளிர்ச்சியடைந்து வலிமையான காந்தப்புலங்களில் ஒடுங்கும் போது இந்நிகழ்வு தோன்றுகிறது. சூரியப் பிழம்பு உற்பத்தியாகும் பகுதிகளுடன் வழக்கமாக இந்நிகழ்வு உடனிணைந்ததாகும். காந்தப்புலங்களால் கவரப்பட்ட பிளாசுமா அங்கு ஒடுக்கமடைந்து பின்னர் மெதுவாக மீண்டும் சூரியனின் மேற்பரப்பில் விழுகிறது.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jauregui, Andres. "Coronal Rain: Solar Flare Rains Fire On Sun In NASA VIDEO". huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  2. Grossman, Lisa. "Video: Coronal Rain Shower Caught on Sun". wired.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  3. "NASA Video Shows Stunning Coronal Rainstorm on Sun". voanews.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  4. Shiga, David. "Sun's rain could explain why corona heat is insane". newscientist.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  5. O'NEILL, IAN. "The Sun's Coronal Rain Puzzle Solved". news.discovery.com. Archived from the original on 15 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Antolin/Verwichte, P./ and E. (Erwin). "Transverse oscillations of loops with coronal rain observed by hinode/solar optical telescope". wrap.warwick.ac.uk. Archived from the original on 14 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிவட்ட_மழை&oldid=3601154" இலிருந்து மீள்விக்கப்பட்டது