ஒளிர்திரை படிமவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிர்திரை படிமவியல்
Fluoroscopy
நவீன ஒளிர்திரை படிமவியல்
ICD-10-PCSB?1
MeSHD005471
ஒளிர்திரை படிமவியல் மூலம் பேரியம் உணவுச் சோதனை

ஒளிர்திரை படிமவியல் (Fluroscopy) என்பது உடலின் உள்பகுதிகளில் அமைந்துள்ள உறுப்புகளின் இயக்கத்தினைக் காண தொடர்கதிர் படமுறை (Serial radiographs ) இருப்பினும் அம்முறைநிறைவானதல்ல. இரு படங்கள் எடுக்கும் கால இடைவெளியில் முக்கியமான இயக்கம் கிடைக்காமல் போகலாம் இப்படிப்பட்ட நிகழ்வு இதய ஆய்வில் சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம்.இதற்காக ,இயங்கும் உறுப்புகளின் நிலையினை உடனுக்குடன் காட்டும் ஒரு முறைத்தேவைப்படுகிறது.அதனை ஈடுகட்டவே ஒளிர்திரையில் (florescent screen ) படத்தினைப் பெற்று ஆய்வுகளை, உறுப்பின் நிலையினை த்தெரிந்து கொள்ளலாம். இங்கு படத்தாளினை மேம்படுத்தி (developing ) உலர்த்தி பின்பு மருத்துவருக்கு அனுப்பும் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

தொடக்க நாள்களில் நோயாளியின் உடலை ஊடுருவிச் செல்லும் கதிர்கள் ஒளிர்திரையில் விழுந்து ,ஒவ்வொரு புள்ளியிலும் வந்தடையும் கதிர்களின் அளவினைப் பொறுத்துபடம் அமைந்தது. மருத்துவர் 50 சென்றி மீட்டர் தொலைவில் இருந்து பார்க்கமுடியும்.ஒளிர்திரையின் பின்பக்கம் ஈயக்கண்ணாடி (lead screen ) அமைக்கப்படுள்ளது . இக்கண்ணாடி மருத்துவரை எக்சு கதிர்களிடமிருந்து காக்க உதவுகிறது. இம்முறையில் ஒரு மங்கலான படிமம் கிடைக்கிறது.கருவியும் இருட்டறையில் இருப்பது அவசியம்.ஒவ்வொரு முறையும் மருத்துவர் அறையினை அடைந்து கண்கள் தக அமைவு பெற 15 நிமுடங்கள் வரையில் ஆகலாம்.அறையினை அடிக்கடி திறக்கவும் முடியாது.இந்த ஒளிர் திரையில் பெறப்படும் படிமம் நீலநிறத்திரையில் பெறப்படுமாயின் மருத்துவர்களால் எளிதில் படத்தினை ஆராயமுடியும் இதற்காக சீசியம் அயோடைட் போன்ற வேதிக்கூட்டுப் பொருட்கள் திரையில் சீராகப் பூசப்பட்டு இருக்கின்றன.

கால விரயத்தினையும் இருட்டறையுமின்றி ஆராய இன்று படிம வலுவாக்கிகள் (Image intensifiers )பயன்படுகின்றன. இதனால் நோயாளிபெறும் கதிர் ஏற்பளவும் கணிசமாகக் குறைகிறது.கருவியின் விலை இதனால் அதிகமாகவே உள்ளது.

வளர்ந்த நாடுகளில் படிம வலுவாக்கி இல்லாத எக்சு கதிர் கருவிகள் வழக்கொழிந்தவையாகவே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிர்திரை_படிமவியல்&oldid=3365273" இருந்து மீள்விக்கப்பட்டது