ஒளிமுனைவு திருப்புமானி

ஒளிமுனைவு திருப்புமானி (Polarimeter) என்பது ஒளியியல் சுழற்சியை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு அறிவியல் கருவியாகும். ஒளியியல் ரீதியாக செயல்நிலையில் உள்ள பொருளின் வழியாக நேரியல் முனைவுப்படுத்தப்பட்ட ஒளி கடந்து செல்வதால் ஏற்படும் சுழற்சியின் கோணம் ஒளிச்சுழற்சிக் கோணம் எனப்படும்.[1]
சில வேதிப் பொருட்கள் ஒளியியல் ரீதியாகச் செயல்படுகின்றன, மேலும் நேரியல் முனைவாக்கப்பட்ட (ஒற்றை-திசை ஒளி) இந்தப் பொருள்களின் வழியாகச் செல்லும்போது இடது (எதிர்-கடிகாரத் திசையில்) அல்லது வலது (கடிகாரத் திசையாக) சுழலும். ஒளி சுழலும் அளவு சுழற்சிக் கோணம் என்று அழைக்கப்படுகிறது. திசை (கடிகார திசையில் அல்லது எதிரெதிர் திசையில்) மற்றும் சுழற்சியின் அளவு மாதிரியின் சமச்சீர்மையற்ற பண்புகள் பற்றிய தகவல்களை, அதாவது மூலக்கூறு மாதிரியில் உள்ள ஆடிஎதிர்உரு மாற்றியங்களின் ஒப்பீட்டு செறிவைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது.
வரலாறு
[தொகு]ஒளியின் பிரதிபலிப்பு மூலம் முனைவாக்கம் 1808 இல் எட்டியென்-லூயிஸ் மாலஸ் (1775-1812) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
அளவீட்டுக் கொள்கை
[தொகு]இரண்டு ஆடிஎதிர்உரு மாற்றியங்களின் விகிதம், தூய்மை, செறிவு ஆகியவற்றை முனைவாக்கத்தின் அளவீட்டின் மூலம் அளவிட முடியும். நேரியல் முனைவுப்படுத்தப்பட்ட ஒளியின் தளத்தைச் சுழற்றும் பண்பு ஆடிஎதிர்உரு மாற்றியங்களை வகைப்படுத்துகிறது. எனவே, அந்தச் சேர்மங்கள் ஒளியியல் ரீதியாக செயல்நிலையில் உள்ளன என்றும் அவற்றின் பண்பு ஒளியியல் சுழற்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒளி விளக்கு, டங்ஸ்டன் ஹாலோஜன் அல்லது சூரியன் போன்ற ஒளி ஆதாரங்கள் புலப்படும் ஒளியின் அதிர்வெண்ணில் மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. அவற்றின் மின்சார புலம் அவற்றின் பரவலின் திசையுடன் தொடர்புடைய அனைத்து சாத்தியமான தளங்களிலும் ஊசலாடுகிறது. இதற்கு மாறாக, நேரியல்-முனைவாக்கப்பட்ட ஒளியின் அலைகள் இணையான தளங்களில் ஊசலாடுகின்றன.[3]
ஒளி ஒரு துருவமுனைப்பை எதிர்கொண்டால், துருவமுனையின் வரையறுக்கப்பட்ட தளத்தில் ஊசலாடும் ஒளியின் ஒரு பகுதி மட்டுமே கடந்து செல்ல முடியும். அந்தத் தளம் துருவமுனைப்பு தளம் என்று அழைக்கப்படுகிறது. துருவமுனைப்பின் தளம் ஒளியியல் ரீதியாக செயலில் உள்ள சேர்மங்களால் திருப்பப்படுகிறது. ஒளி சுழலும் திசையின்படி, ஆடிஎதிர்ஊரு மாற்றியங்களில் வலஞ்சுழி-சுழற்சி அல்லது இடஞ்சுழி-சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.
ஆடிஎதிர்ஊரு மாற்றியங்ககளின் ஒளிச் செயல்திறன் கூட்டப்படும் தன்மை கொண்டது. வெவ்வேறு ஆடிஎதிர்ஊரு மாற்றியங்ககள் ஒரே கரைசலில் ஒன்றாக இருந்தால், அவற்றின் ஒளிச் செயல்திறன்கள் கூட்டப்படும். இப்பண்பின் காரணமாகவே சுழிமாய்க் கலவைகள் ஒளியைத் திருப்பும் தன்மையற்றவையாகக் காணப்படுகின்றன. சுழிமாய்க் கலவையின் கரைசலில் காணப்படும் வலஞ்சுழி, இடஞ்சுழி ஒளிச்செயல்திறன் பண்புகள் ஒன்றை ஒன்று சமனப்படுத்தி ஒளியைத் திருப்பும் தன்மையற்றதாக மாறுகிறது. ஒளியியல் சுழற்சி என்பது கரைசலில் உள்ள ஒளியியல் செயல்திறன் மிக்க பொருள்களின் செறிவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். எனவே, ஒளிமுனைவு திருப்புமானிகளை தனிச்சுழற்சி ஆடிஎதிர்ஊரு தூய மாதிரிகளின் செறிவு அளவீட்டிற்குப் பயன்படுத்தலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Polarimeter | WordNet Search". wordnetweb.princeton.edu. Retrieved 2023-04-27.
- ↑ "Polarimeter". physics.kenyon.edu. Archived from the original on 2023-05-13. Retrieved 2023-04-27.
- ↑ Hart, C. (2002), Organische Chemie, Wiley-VCH, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30379-0