ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரைப்பகுதி மற்றும் நீர்ப்பகுதி ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்: பாசி படர்ந்த நீரில் விழுந்த மரக்கட்டையில் வளரும் தாவரங்கள்

ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் (Phototrophs, கிரேக்கம்: φῶς, φωτός = ஒளி, τροϕή = வளர்ச்சி) உயிரினங்கள் ஒளியணுவைக் கைப்பற்றி ஆற்றல் பெறுபவையாகும். இவை ஒளியிலிருந்து பெறும் ஆற்றலை பல்வேறு உயிரணு உயிர்பொருள் மாறுபாட்டு செய்முறைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் கட்டாயமாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்ற தவறான கருத்து உள்ளது. அனைத்துமில்லாவிடினும் பல ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் ஒளித்தொகுப்பில் ஈடுபடுகின்றன; இவை உட்சேர்க்கை மூலமாக காபனீரொக்சைட்டை கரிமப் பொருளாக மாற்றி தங்கள் கட்டமைப்பு, செயலாக்கம் மற்றும் பிந்தைய சிதைவுக்கு ஏற்றவையாக (மாவுப்பொருள், சர்க்கரை, கொழுப்பு என) பயன்படுத்திக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் இலத்திரன் கடத்திச் சங்கிலிகளை பயன்படுத்தியோ நேரடி நேர்மின்னி இறைத்தோ மின்னணு-வேதி சாய்வை ஏற்படுத்துகின்றன; இதனைப் பயன்படுத்தி ஏடிபி சின்தேசு உயிரணுக்களுக்கு மூலக்கூற்று ஆற்றலை வழங்குகின்றன.