ஒளிகிளர்ச்சி
Jump to navigation
Jump to search
ஒளி கிளர்ச்சி என்பது ஒளிமின்னியின் உட்கவர்வால் மின்துகள் கிளர்ச்சியடையும் ஒளிமின் வேதிய முறை ஆகும். ஒளிமின்துகளி நீக்ககூற்றினை ஏற்படுத்துவதற்கு ஒளிமின்னியின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும் போது ஒளிகிளர்ச்சி நிகழ்கிறது. ஒளிகிளர்ச்சி உட்கவர்தல் பிளாங்கின் குவாண்டம் (குவயம்) கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது.
ஒளிகிளர்ச்சி ஒளிமின் மாற்றாக்கலில் பங்கு வகிப்பதோடு சாய கூருணர்ச்சியூட்டிய ஞாயிற்றுக்கலங்களிலும், ஒளி வேதியியலிலும்,ஒளிர்வுப் பிறக்கத்திலும் மற்றும் சில ஒண்குருமவியல் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.