உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளி உமிழ் இருமுனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒளிகாலும் இருமுனையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒளி-உமிழ் இருமுனையம்
5 மிமீ ஒளிவிரவிய உறைகளில் நீலம், தூய பச்சை, சிவப்பு ஒளியீரிகள்
வகைமுனைப்பற்ற, ஒளி மின்னணுவியல்
செயல் கோட்பாடுமின்ஒளிர்வு
கண்டுபிடித்தவர்ஒலெக் இலோசெவ் (1927)[1][2][3]
ஜேம்சு ஆர். பியர்டு (1961)[4]
நிக் ஓலொன்யக் (1962)[5]
முதல் தயாரிப்பு1968[6]
Pin configurationநேர் மின்முனை, எதிர் மின்முனை
இலத்திரனியல் குறியீடு
ஒளியீரியின் பாகங்கள்.
Modern LED retrofit with E27 screw in base
குமிழ்விளக்கு வடிவத்தில் தற்கால ஒளிகாலும் இருவாயி விளக்கு. அலுமினிய வெப்பக் கடத்தியையும் ஒளியை விரவும் குவிமுகத்தையும் E27 திருகாணித் தளத்தையும் கொண்டுள்ளது. நேரடியாக பயன்பாட்டு மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடியது.

ஒளி-உமிழ் இருமுனையம் அல்லது ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி (இலங்கை வழக்கு: ஒளிகாலும் இருவாயி, light-emitting diode) என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இது இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.[7] இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர்மின்னிகள் புரைமின்னிகளுடன் மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின்ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது.

1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ள[8] ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன. இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் கட்புலனாகும் ஒளி, புற ஊதாக் கதிர், மற்றும் அகச்சிவப்புக் கதிர் அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.

ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீ2க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன.[9]

இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "The life and times of the LED — a 100-year history". The Optoelectronics Research Centre, University of Southampton. April 2007 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 15, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120915034646/http://holly.orc.soton.ac.uk/fileadmin/downloads/100_years_of_optoelectronics__2_.pdf. பார்த்த நாள்: September 4, 2012. 
  2. Nosov, Yu. R. (2005). "О. В. Лосев – изобретатель кристадина и светодиода [O. V. Losev - the Inventor of Crystodyne and Light-emitting Diode]" (in Russian). Электросвязь (5): 63. http://www.computer-museum.ru/connect/losev.htm. 
  3. Novikov, M. A. (2004). "Олег Владимирович Лосев — пионер полупроводниковой электроники [Oleg Vladimirovich Losev — a Pioneer of Semiconductor Electronics]" (in Russian) (PDF). Физика твердого тела 46 (1). http://www.ioffe.ru/journals/ftt/2004/01/p5-9.pdf. பார்த்த நாள்: 2014-10-08. "Кроме того, О.В. Лосеву удалось очень далеко продвинуться в понимании физики этих явлений в условиях, когда еще не была создана зонная теория полупроводников. Так что современные защитники приоритета Роунда вряд ли имеют право оспоривать выдающийся вклад нашего соотечественника в эту область физики и особенно в изобретение светодиода. Ведь изобретателями радио считаются по праву Попов и Маркони, хотя всем известно, что радиоволны первым наблюдал Герц. И таких примеров в истории науки много.". 
  4. "The first LEDs were infrared (invisible)". Smithsonian National Museum of American History. October 2007 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 1, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100401133528/http://invention.smithsonian.org/centerpieces/quartz/inventors/biard.html. பார்த்த நாள்: July 24, 2013. 
  5. "Inventor of Long-Lasting, Low-Heat Light Source Awarded $500,000 Lemelson-MIT Prize for Invention". Massachusetts Institute of Technology. Washington, D.C.. April 21, 2004. http://web.mit.edu/invent/n-pressreleases/n-press-04LMP.html. பார்த்த நாள்: December 21, 2011. 
  6. Schubert, E. Fred (2003). "1". Light-Emitting Diodes. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8194-3956-8.
  7. "LED". The American heritage science dictionary. (2005). Houghton Mifflin Company.  led and LED.
  8. "Nick Holonyak, Jr. 2004 Lemelson-MIT Prize Winner". Lemenson-MIT Program. Archived from the original on ஜனவரி 20, 2013. பார்க்கப்பட்ட நாள் August 13, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. . பப்மெட்:18542260. 

படிப்புக்கு பரிந்துரை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_உமிழ்_இருமுனையம்&oldid=3711582" இலிருந்து மீள்விக்கப்பட்டது