ஒல்கா பேப்யி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒல்கா பேப்யி
Olga Babiy
Olga Kalinina (2014).jpg
2008 இல் ஒல்கா பேப்யி
நாடு உக்ரைன்
பிறப்பு20 சூன் 1989 (1989-06-20) (அகவை 31)
டெர்னோபில் உக்ரைன்
தலைப்புபெண் கிராண்டு மாசுட்டர் (2013)

ஒல்கா பேப்யி (Olga Babiy) என்பவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சூன் மாதம் இருபதாம் ஆம் நாள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பேப்யி வெற்றி பெற்றார் [1]. இதே ஆண்டு எவ்பேட்டோரியாவில் நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார் [2].சீனாவின் சென்சென் நகரில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால அனைத்துலக பல்கலைக்கழக அணிப் போட்டியில் உக்ரைனிய மாணவர் அணியில் பங்கேற்று விளையாடி வெள்ளி பதக்கம் பெற காரணமாக இருந்தார். 2015 ஆம் ஆண்டு உக்ரைனின் லிவிவ் நகரில் நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2008 ஆம் ஆண்டில் பிடே அமைப்பின் அனைத்துலக பெண்கள் சதுரங்க மாசுட்டர் பட்டமும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குப் ப் இன்னர் பெண்கள் கிராண்டு மாசுட்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது [3].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்கா_பேப்யி&oldid=2719311" இருந்து மீள்விக்கப்பட்டது