ஒலி 96.8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலி 96.8 என்பது பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும், சிங்கப்பூரின் ஒரே 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவையாகும்.

ஒலி 96.8 காலக்கோடு[தொகு]

 • 1959 - இந்நிறுவனத்தின் பெயர் ரேடியோ சிங்கப்பூர் என மாற்றப்பட்டது.
 • 1965 - ஆகஸ்ட் மாதம் இந்நிலையம் ரேடியோ சிங்கப்பூர் நிலையம், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS), ரேடியோ சிங்கப்பூர் எனப் பெயர் மாற்றம் கண்டது. இந்திய மொழி ஒலிபரப்பு இந்தியச் சேவை என்றழைக்கப்பட்டது.
 • 1980 - RTS சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம (SBC) என்ற ஆணை பெற்ற கழகம் ஆனது.
 • 1982 - இந்திய வானொலிச் சேவை ஒலிவழி 4 எனப் பெயர் மாற்றம் கண்டது.
 • 1992 - ஒலிவழி 4, ஒலிக்களஞ்சியம் என்ற பெயரைப் பெற்றது.
 • 1994 - சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம் தனியார் மயமாகி சிங்கப்பூர் வானொலிக் கழகம் என்ற பெயரைப் பெற்றது.
 • 1997 - ஏப்ரல் 14 இல் ஒலிக்களஞ்சியம் என்ற பெயர் சுருங்கி ஒலி 96.8 ஆனது.
 • 1998 - மே மாதத்தில் ஒலியின் முதல் நூல் வெளியீடாக, மீனாட்சி சபாபதி எழுதிய அறிவோமா நாம் புத்தகம் வெளியிடப்பட்டது. நம்மவர்களின் பண்பாட்டின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படைய விளக்கி ஈராண்டு தொடர்ந்து ஒலியேறிய அறிவோமா நாம் எனும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களை இந்நூல் கொண்டிருந்தது.
 • 1998 - ஜூலை 4 இல் ஒலிக்கு முதல் அறப்பணி விருது, நியூயார்க்கில் வழங்கப்பட்டது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250,000 வெள்ளி திரட்டியதற்காக அந்த அங்கீகாரம்.
 • 2001 - ஜூன் 21இல் சமூக சேவைக்குரிய பெருமைமிகு வோர்ல்ட்மெடல் விருது நியூயார்க் விழாவில் வழங்கப்பட்டது. அது குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிக் கொடுத்த ஒலியின் சாதனை முயற்சிக்காக வழங்கப்பட்டது.
 • 2001 - ஆகஸ்ட் 10 இலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாத ஒலிபரப்பு வழங்கத் தொடங்கியது.
 • 2002 - பெப்ரவரி 22இல் ஒலி 96.8 -க்கு குஜராத் நிதி திரட்டு முயற்சிக்காக பிரிசம் விருது (மானிடச் சேவையில் பொதுச் சேவை விருது) சிங்கப்பூர் பொதுத் தொடர்புக் கழகத்தால் வழங்கப்பட்டது.
 • 2002 - மே 26இல் வழக்கமாகத் தொலைக்காட்சிக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரதான விழாவில் முதன் முறையாகப் பங்கேற்றது ஒலி. மிகப் பிரபலமான ஒலி படைப்பாளர் விருதை ரஃபி வென்றார். மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக வரலாற்றில் இன்று தேர்வு பெற்றது.
 • 2002 - ஆகஸ்ட் 10-11 ஒலியின் 24 மணி நேரச் சேவையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடா மேடை/கலை நிகழ்ச்சியை செந்தோசாவில் நடத்தியது. சுமார் 7000 பேர் கலந்து கொண்டனர். புதுப்பிக்கப்பட்ட இணையப் பக்கமும் அரங்கேறியது.
 • 2002 - நவம்பர் 9இல் ஒலியின் முதல் தீபாவளி அறநிதி விருந்து நிகழ்ச்சி. வானொலி மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் வழி 2 வாரங்களில் $60, 000வெள்ளி திரட்டப்பட்டது. சிண்டாவின் புரொஜெக்ட் கிவ் திட்டத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டது. 2003 நவம்பர் 1இல் நடந்த இரண்டாவது விருந்து நிகழ்ச்சியின் போது $32,000 வெள்ளி திரட்டப்பட்டது.
 • 2003 - ஆகஸ்ட் 9-10இல் ஒலியின் 24 மணி நேர சேவை தொடங்கி ஈராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு மாபெரும் தீவு தழுவிய 24 மணி நேர தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலியும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. 2003 ஆகஸ்ட் 10 -ம் தேதி, ஒலி முதன் முறையாக இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது. 212 அலகு இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, மீடியாகார்ப் வானொலிகளின் ஆறு மாத நடவடிக்கைகளில் மிகச் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 • 2003 - ஆகஸ்ட் 10 உலகத் தமிழ் வரலாற்றில் புது முயற்சியாக ஒலியுடன் தமிழில் எனும் குறுவட்டை வெளியிட்டது ஒலி. இவ்வட்டின் வழி, நேயர்கள் ஒலி படைப்பாளர்களுக்கு நேரடியாக தமிழில் மின்னஞ்சல் (மின் கடிதம்) அனுப்ப முடியும். 10,000 வட்டுகள் நேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
 • 2004 - மார்ச் 5இல் ஒலி 96.8 இரண்டாம் முறையாக பிரிசம் விருது பெற்றது. இம்முறை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நடத்தியமைக்காக அந்த விருது கிடைத்தது.
 • 2004 - டிசம்பர் 30ஜனவரி 2 2005 இல் ஒலியும் வசந்தம் சென்ட்ரலும் இணைந்து சுனாமி பேரிடருக்காக கேம்பல் லேனில் நிதி திரட்டு நிகழ்ச்சியை நடத்தின. Lisha மற்றும் வேறு சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்காக நான்கே நாட்களில் 426 000 வெள்ளி திரட்டப்பட்டது. மேலும் ஒலியின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிமிடத்திற்கு எங்கள் ஒலி அலை ஓய்ந்தது. சுனாமியில் மாண்டோரின் நினைவாக 2004 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலி_96.8&oldid=2244012" இருந்து மீள்விக்கப்பட்டது