ஒலி மருத்துவம்
ஒலி மருத்துவம் (Phoniatrics or phoniatry) என்பது பேச்சு உற்பத்தியில் ஈடுபடும் உறுப்புகளைப் பற்றிய ஆய்வு மற்றும் சிகிச்சை ஆகும்.[1] முக்கியமாக வாய், தொண்டை (குரல்வளை), குரல் நாண்கள் மற்றும் நுரையீரல்கள் ஆகியவை இதில் அடங்கும். குரல் நாண்களின் செயலிழப்பு, குரல் நாண்கள் அல்லது குரல்வளை புற்றுநோய், பேச்சு உறுப்புகளைச் சரியாகக் கட்டுப்படுத்த இயலாமை (பேச்சு கோளாறுகள்), மற்றும் குரல் சுமை பிரச்சினைகள் ஆகியவை ஒலி மருத்துவத்தில் சிகிச்சையளிக்கப்படும் பிரச்சினைகளில் அடங்கும்.[2] போனியாட்ரிக்சு அல்லது போனியாட்ரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இச்சிகிச்சை பேச்சுக்குறை ஒலி மருத்துவம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவத்துறை குரல், பேச்சு, மொழி மற்றும் கேள்வி தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவாகும்.
ஐரோப்பிய ஒலி மருத்துவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ஒலி மருத்துவம் என்பது "குரல், பேச்சு, மொழி, செவிப்புலன் மற்றும் விழுங்குதல் கோளாறுகளைக் கையாளும் மருத்துவ சிறப்புத் துறை ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meaning of phoniatrics - Infoplease". InfoPlease.
- ↑ Zehnhoff-Dinnesen, Antoinette am; Wiskirska-Woznica, Bozena; Neumann, Katrin; Nawka, Tadeus (2019-08-15). Phoniatrics I: Fundamentals – Voice Disorders – Disorders of Language and Hearing Development (in ஆங்கிலம்). Springer Berlin Heidelberg. ISBN 9783662467794.
- ↑ "Phoniatrics, the Medical Specialty for Communication Disorders". www.phoniatrics-uep.org. Retrieved 31 January 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Logbook Phoniatrics UEMS 2010" (PDF). Union of the European Phoniatricians. 1 October 2010. Archived from the original (PDF) on 30 October 2016. Retrieved 30 October 2016.