ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு)
Sound Recorder icon.png
மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
Sound Recorder XP.jpg
விண்டோஸ் எக்ஸ்பியில் ஒலி பதிவு செய்யும் கருவி
Details
வகை ஒலி பதிப்பி மென்பொருள்
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
மைக்ரோசாப்ட் விண்டோசு

ஒலி பதிவு செய்யும் கருவி (ஆங்கிலம்: Sound Recorder) எனப்படுவது மைக்ரோசாப்ட் விண்டோசுவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒலி பதிப்பி மென்பொருளாகும். இந்த மென்பொருளின் விஸ்டா பதிப்பு அதிக நேரம் ஒலியைப் பதிவு செய்யக் கூடியதாக அமைந்திருந்தாலும் குறைந்த தெரிவுகளையே கொண்டுள்ளது.

வசதிகள்[தொகு]

ஒலி பதிவு செய்யும் கருவி மூலம் நுணுக்குப்பன்னியைப் பயன்படுத்தி ஒலியைப் பதிவு செய்து கொள்ள முடியும். பதியப்பட்ட ஒலி .wav எனும் நீட்சியாகச் சேமிக்கப்படும். பதியப்பட்ட ஒலியின் அளவை மாற்றி அமைக்கவும் வேகத்தை மாற்றி அமைக்கவும் ஒலி பதிவு செய்யும் கருவி மென்பொருளைப் பயன்படுத்த முடியும். பதியப்பட்ட ஒலியைப் பகுதிகளாகப் பிரிக்கவும் முடியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]