உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிய காபன்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலியா காபன்சிஸ்
கேப் டவுனில்
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
. காபன்சிஸ்
இருசொற் பெயரீடு
காபன்சிஸ்
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள்
  • ஒலியா லாரிஃபோலியா Lam.

ஒலியா காபன்சிஸ் (Olea capensis)[2] என்பது ஒலியாசியே எனப்படும் ஆலீவ் மரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க மர இனம் ஆகும். இது ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தின் கீழே கிழக்கில சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் சூடான் வரையிலும், தெற்கில் தென்னாப்பிரிக்காவின் தென் முனை வரையிலும், மேற்கில் காமெரூன், சியரா லியோன் மற்றும் கினி வளைகுடா தீவுகள் வரையிலும், மேலும் மடகஸ்கார் மற்றும் கொமோரோஸ் தீவுகளிலும் காணப்படுகிறது. இது புதர்களிலும், கடலோரப் புதர்களிலும் பசுமைமாறாக் காடுகளிலும் வளர்கிறது.

பொதுவாக ஆங்கிலத்தில் கருப்பு இரும்புமரம், கிழக்கு ஆப்பிரிக்க ஆலிவ், எல்கோன் ஆலிவ், இரும்புச்செடி, இரும்புப்பூச்சி ஆலிவ் என்று அறியப்படுகிறது. ஆஃப்ரிகான்ஸில இஸ்டர்ஹவுட் என்றும் சுவாஹிலியில் லியோலிண்டோ, முஷ்ரிஜி என்றும் அறியப்படுகிறது: இதன் வணிகப் பெயர்கள் லியோலிடோ, முத்தாரேஜ், முத்தராகி ஆலிவ் ஆகும்.

பண்புகள்[தொகு]

இது பெரிய உண்ணக்கூடிய பழங்களைக் கொண்டிருக்கிறது. இந்த மரத்தின் கட்டை கடினமானதாகவும் கனம் மிக்கதாகவும் வேலை செய்யக் கடினமாகவும் இருக்கும், இருப்பினும் இது கலைப்பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இந்த மரம் உலகின் மிகவும் கனமான மரக்கட்டையைக் கொண்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் சாரடர்த்தி 1.49 ஆக கருப்பு நிலக்கரிக்கு இணையாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Botanic Gardens Conservation International (BGCI).; IUCN SSC Global Tree Specialist Group (2020). "Olea capensis". IUCN Red List of Threatened Species 2020: e.T61919282A146444162. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T61919282A146444162.en. https://www.iucnredlist.org/species/61919282/146444162. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Http://www.theplantlist.org/tpl1.1/record/kew-355058
  3. "Solids and Metals - Specific Gravities".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிய_காபன்சிஸ்&oldid=3918298" இலிருந்து மீள்விக்கப்பட்டது