ஒலியியல் சிதறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலியியல் சிதறல் (Acoustic dispersion) என்பது ஒரு பொருளின் வழியாக ஒலி செல்லும்போது அதன் உட்கூறுகளாக உள்ள அதிர்வெண்களைப் பிரிக்கும் ஓர் ஒலி அலை நிகழ்வு ஆகும். ஒலி அலையினுடைய கட்டத் திசைவேகமானது அதிர்வெண்ணின் செயல்பாடாகக் கருதப்படுகிறது. எனவே, கதிர்வீச்சு அலைகள் ஒரு குறிப்பிட்ட ஊடகம் வழியாக கடந்து செல்லும் போது பிரிக்கப்படும் உட்கூறு அலைவரிசைகளின் கட்டத் திசை வேக மாற்றங்களின் விகிதத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது [1][2].

ஒலியியல் சிதறலை தீர்மானிக்க பரவலாக பயன்படுத்தப்படுவது அகலக்கற்றை பரிமாற்றம் எனப்படும் முறையாகும். இந்த நுட்பமானது முதலில் 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இதே ஆண்டில் உலோகங்களில் ஒலியியல் சிதறல் பற்றிய ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டன. 1986 இல் இப்பாக்சி பிசின்களிலும், 1993 இல் காகிதப் பொருட்களிலும், 1998 இல் மீயொலி மாறுபாடு முகவர்களிலும் தீவிரமாக ஆராயப்பட்டன. 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் ஒலியியல் அலைகளுக்கும் கிரமர்கள்-கிரோனிக் உறவை இம்முறை உறுதி செய்கிறது [2].

இம்முறையினைப் பயன்படுத்துவதற்கு ஒலியியல் சிதைவுக்கான அளவீடுகள் அவசியமாகின்றன. இவற்றைப் பெறுவதற்காக ஒரு அடையாளத் திசைவேகத்தின் அளவீடுகள் தேவை. பொதுவாக இதற்காக தண்ணீரில் ஒலியின் திசைவேகம் அடையாளத் திசைவேகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாதிரியின் தடிமன் மற்றும் இரண்டு பரிமாற்ற மீயொலித் துடிப்புகளின் கட்ட நிறமாலை ஆகியவை நிர்ணயிக்கின்றன [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acoustic dispersion". McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, 6th edition. 2010 [2003]. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11. {{cite web}}: External link in |publisher= (help)
  2. 2.0 2.1 2.2 He, Ping (February 2000). "Measurement of acoustic dispersion using both transmitted and reflected pulses". Journal of the Acoustical Society of America 107 (2): 801–807. doi:10.1121/1.428263. பப்மெட்:10687689. Bibcode: 2000ASAJ..107..801H. http://www.engineering.wright.edu/~phe/Research/JASA-00.pdf. பார்த்த நாள்: 2009-02-11. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியியல்_சிதறல்&oldid=3237345" இலிருந்து மீள்விக்கப்பட்டது